நகைக்காக மாமியாரைக் கொலை செய்து சடலத்தை குவாரி குட்டையில் வீசிய சம்பவத்தில் திமுக ஒன்றிய அமைப்பாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்ட சசிகலா பாப்பிரெட்டிப்பட்டி அருகே வெங்கடசமுத்திரத்தைச் சேர்ந்த அசோகன்-சசிகலா தம்பதிக்கு 3 மகள்கள் ஒரு மகனும் உள்ளனர். கடந்த 15 ஆம் தேதி வெளியில் சென்ற சசிகலா வீடு திரும்பாததால் கணவர் அசோகன் பாப்பிரெட்டிப்பட்டி போலீசில் புகார் அளித்தார். சசிகலாவைப் பல இடங்களில் தேடி வந்த போலீசார், அவர்களின் மகள் உமா மகேஸ்வரியின் கணவரும் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய திமுக இளைஞரணி நிர்வாகியுமான அஸ்லாமிடம் விசாரித்தபோது முன்னுக்குப் பின்னாகப் பேசியுள்ளார். சந்தேகமடைந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தியபோது, மாமியார் சசிகலாவிடம் ஏற்கனவே 5 பவுன் நகையை வாங்கி திருப்பிக் கொடுக்காததால் தகராறு ஏற்பட்டதாகவும், மேலும் அவரிடம் இருக்கும் மற்ற நகைகளையும் அபகரிக்கவும் திட்டமிட்டு காரில் கடத்திச் சென்று கழுத்தை நெறித்து கொலை செய்ததாகவும், அவர் உடலை நண்பரின் ஆம்புலன்ஸில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடிக்குக் கொண்டு சென்று அங்குள்ள குவாரி குட்டையில் கல்லைக்கட்டி வீசிவிட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார். அஸ்லாம் அதிர்ச்சியடைந்த தனிப்படை போலீசார் வாணியம்பாடி சென்று குவாரி குட்டையில் மிதந்த சசிகலாவின் உடலை மீட்டனர். நகைக்காக மட்டும் இக்கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா? என்று அஸ்லாமிடமும் உதவி செய்த அவரின் நண்பர்களான ஆம்புலனஸ் டிரைவர் பூபால், நவீன் ஆகியோரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிள்ளது. காஞ்சிபுரம்: கோயில் திருவிழா தகராறில் நடந்த இரட்டைக் கொலை; போலீஸ் குவிப்பு; என்ன நடந்தது? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/crime/dharmapuri-dmk-leader-arrested-against-murder-case




