வண்டலூர், ஊரப்பாக்கம் அருகே பள்ளி பஸ் - மொபட் மோதிய விபத்தில் தாய், மகள் பலியானார்கள். செங்கல்பட்டு மாவட்டம் கீரப்பாக்கம் கிராமத்தில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் தேவி (வயது 45). இவரது மகள் சுவாதி (வயது 23). நேற்று இருவரும் கீரப்பாக்கத்தில் இருந்து ஊரப்பாக்கம் நோக்கி ஒரே மொபட்டில் சென்று கொண்டிருந்தனர். மொபட்டை சுவாதி ஓட்டிச்சென்றார். விபத்து காரணைப்புதுச்சேரி-அருங்கால் சாலையில் முன்னால் சென்ற அரசு பஸ்சை முந்திசெல்லும் போது, ஊரப்பாக்கத்தில் இருந்து அருங்கால் நோக்கி வந்த தனியார் பள்ளி பஸ், சுவாதி ஓட்டி சென்ற மொபட் மீது மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் தேவி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த சுவாதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே சுவாதியும் பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் விசாரணை இதுகுறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து, பலியான தாய், மகள் இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கீரப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/tragedy-near-chengalpattu-mother-and-daughter-killed-in-school-bus-crash




