தூத்துக்குடி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக உண்டியல்களில் செலுத்தும் பணம் மாதந்தோறும் எண்ணப்படுகிறது. அந்த வகையில், கடந்த இரண்டு நாட்களாக திருச்செந்தூர் கோவிலில் உள்ள உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணத்தை எண்ணும் பணி நடைபெற்றது. இந்த பணியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட கோவில் பணியாளர்கள் மற்றும் உழவாரப்பணி குழுவினர் ஈடுபட்டனர். இதன்படி, திருச்செந்தூர் முருகன் கோவிலில் உண்டியல் வருமானமாக, கடந்த மாதம் 4 கோடியே 21 லட்சத்து 56 ஆயிரத்து 205 ரூபாய் கிடைத்துள்ளது. மேலும், 1 கிலோ 22 கிராம் தங்கம், 22 கிலோ 292 கிராம் வெள்ளி மற்றும் 1,447 வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/devotional/the-offering-box-collection-at-the-tiruchendur-murugan-temple-last-month-was-421-crore




