சென்னை, சென்னை மாநகராட்சி பணியாளர்களின் நலனுக்காக மனநல மேம்பாட்டிற்கான நல மையத்தினை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன், திறந்து வைத்தார்.இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- மாநகராட்சி ஆணையாளர் சென்னை மாநகராட்சியுடன் சென்னை கிரடாய் அறக்கட்டளை மற்றும் த்ருதி அறக்கட்டளை இணைந்து பெருநகர சென்னை மாநகராட்சிப் பணியாளர்களின் நலனுக்காக அமைக்கப்பட்ட மனநல மேம்பாட்டிற்கான a நல மையத்தினை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன், இன்று ரிப்பன் கட்டட வளாகத்தில் திறந்து வைத்தார். மனநல முன்னெடுப்பு மைண்ட் மந்திரா என்பது சென்னை மாநகராட்சியுடன் கிரடாய் சென்னை அறக்கட்டளை மற்றும் த்ருதி அறக்கட்டளை ஆகியவை இணைந்து சென்னை மாநகராட்சி பணியாளர்களின் மன மற்றும் உணர்ச்சி நல்வாழ்வை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்ட ஒரு முழுமையான மனநல முன்னெடுப்பாகும். மைண்ட் மந்திரா நல மையம் சென்னை மாநகராட்சி, ரிப்பன் கட்டட வளாகத்தில் வருவாய்த்துறை கட்டடத்தில் மைண்ட் மந்திரா நல மையம் அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய 3 நாட்களுக்கு மைண்ட் மந்திராவின் +91 80314 51918 என்ற உதவி எண்ணிலும், நேரிலும் தொடர்பு கொண்டு பதிவு செய்து, செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் உளவியலாளர்கள் மற்றும் ஆலோசகர்களிடம் நேரில் மனநல ஆலோசனைகளை பெறலாம். விழிப்புணர்வு பணிபுரியும் பணியாளர்களுக்கு மனநலம் குறித்த விழிப்புணர்வை அதிகரித்தல், மன அழுத்தத்தை புரிந்துகொண்டு அதை சமாளிக்க உதவுதல், உணர்வுரீதியான மன உறுதியை வளர்த்தல் மற்றும் தொழில்முறை ஆலோசனைகளை உரிய நேரத்தில் பெறுவதை ஊக்குவித்தல் ஆகிய நோக்கங்களுடன் இத்திட்டம் 10.08.2026 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. மீள்திறனை இதன் தொடர்ச்சியாக, மைண்ட் மந்திரா நல மையம் அமைக்கப்பட்டு ஆணையாளரால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் மாநகராட்சி பணியாளர்கள் தொழில்முறை ஆலோசனை மற்றும் உளவியல் ஆதரவை பெறவும், தங்கள் கவலைகளை பற்றி விவாதிக்கவும், மன அழுத்தத்தை கையாள்வதற்கும் மீள்திறனை வலுப்படுத்துவதற்குமான நடைமுறை உத்திகளை கற்றுக்கொள்ளவும் ஆதரவான இடத்தை வழங்குகிறது. இந்நிகழ்ச்சியில், இணை ஆணையாளர் (கல்வி) க. கற்பகம், உதவி ஆணையாளர் (பொது நிர்வாகம்) உமா மகேஷ்வரி, த்ருதி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர்/இணை நிறுவனர் சுரேஷ் அருணாசலம், மாநகர நல அலுவலர் எம்.ஜெகதீசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/opening-of-mental-health-centre-for-chennai-corporation-staff




