மதுரை, மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழக கவர்னர், அரசியல் சாசனம் அவருக்கு வழங்கியிருக்கக்கூடிய அதிகாரங்களை மீறி, ஆய்வுக்கூட்டம் நடத்தியது கண்டனத்திற்குரியது. ஏற்கனவே ஆர். என். ரவி, இத்தகைய அணுகுமுறைகளை மேற்கொண்டபோதெல்லாம் தமிழகம் ஒட்டுமொத்தமாகக் கண்டித்திருக்கிறது. ஆகவே, இப்போதுள்ள கவர்னரும் அதே அணுகுமுறையைத் தொடர்ந்து கடைபிடிப்பது என்பது பொருத்தமானது அல்ல. ஏனென்றால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம் இங்கே இருக்கக்கூடிய நிலையில், அவர் தானாகவே பிரச்சினையையெல்லாம் தீர்த்துவிடுவதைப் போல பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்திருப்பது என்பது கொஞ்சம் கூட பொருத்தமானது அல்ல.இடைத்தேர்தலைப் பொறுத்தவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதுவரைக்கும் எந்த முடிவும் எடுக்கவில்லை. நாங்கள் அந்த அணியிலேயோ, இந்த அணியிலேயோ கிடையாது. நாங்கள் இடதுசாரி அணி என்பதில் தனித்துச் செயல்படுகிறோம். அதே நேரத்தில், த.வெ.க. ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு என்பது தொடரும். அதுல எந்தவிதமான மாற்றமும் கிடையாது.கரூர் விவகாரத்தில் மத்திய புலனாய்வு துறை விசாரணை இருக்கும் போதே அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பல்வேறு கருத்துக்களை தெரிவிப்பது ஏற்புடையதல்ல. இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/support-for-the-tvk-government-will-continue-communist-state-secretary-p-shanmugam




