‘லப்பர் பந்து’ படத்தின் நாயகி நடிகை சஞ்சனா மற்றும் நடிகர் கிஷன் தாஸ் நடித்துள்ள புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் சந்தோஷ் ஸ்ரீவஸ்டன் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு ‘சீ யூ’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நாயகியாக சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியும் நாயகனாக கிஷன் தாஸும் நடித்துள்ளார்கள். இப்படத்தை ஏஆர் என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் டி ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. இந்தப் படத்துக்கு ஜுனம் இசையமைத்து வருகிறார். நடிகர் கிஷன் தாஸ் கடைசியாக நடித்த ‘ஆரோமலே’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. நடிகை சஞ்சனா ‘லப்பர் பந்து’ படத்தில் நடித்து புகழ்பெற்றார். ‘தக் லைப்’ படத்தில் சஞ்சனா உதவி இயக்குநராக பணியாற்றியதும் குறிப்பிடத்தக்கது. கடைசியாக ‘பரிமளா அண்ட் கோ‘ படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில், ‘சீ யூ’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. நடிகர் ஆர்யா இந்தப் படத்தின் போஸ்டரை வெளியிட்டு படக்குழுவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். காதல் கதையாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்து விரைவில் அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/sanjanas-new-film-first-look-poster-out




