சென்னை, சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக, ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணியும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன், உதவியாளர் கணேசன் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வீரமணி மற்றும்அவரது கூட்டாளிகள் மீது குண்டர் சட்டத்தைப் பாய்ச்சுவதற்கான பரிந்துரைகளை சிறப்புப் புலனாய்வுக் குழு தயார் செய்துள்ளது. இதற்காக இரண்டு உதவி ஆணையர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் வரைவு அறிக்கையைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்னும் ஓரிரு நாட்களில் இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது சிறையில் உள்ள வீரமணி மற்றும் அவரது கூட்டாளிகளிடம் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்தடுத்துப் பல வழக்குகள் பதிவாகி வருவதால், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பதாகக்கருதி அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் ஏவப்படஉள்ளது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/will-the-goondas-act-be-invoked-against-veeramani-who-is-embroiled-in-a-sexual-assault-case




