மேற்கு ஆசியாவில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் இன்று இந்தியா வருகிறார். 8 ஆண்டுகளுக்குப் பிறகு ஈரான் அதிபர் ஒருவர் இந்தியா வருவது குறிப்பிடத்தக்கது. 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லி வரும் ஈரான் அதிபருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. மோடியுடன் இன்று முக்கிய பேச்சுவார்த்தை ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான், பிரதமர் நரேந்திர மோடியை இன்று மாலை நேரில் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். முன்னதாக அவர் பிரிக்ஸ் வர்த்தக மாநாட்டில் பிரதமர் மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்ட தலைவர்களுடன் பங்கேற்கிறார். மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் மோதல் சூழ்நிலைக்கு மத்தியில் நடைபெறும் இந்த சந்திப்பு சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தியா-ஈரான் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது, பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்த வாய்ப்பு உள்ளது.ஈரான் அதிபரின் இந்திய பயணம், இரு நாடுகளுக்கு இடையிலான தூதரக உறவில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கும் முக்கிய நாடுகளின் தலைவர்கள் விவரம்; சீனா: அதிபர் ஷி ஜின்பிங் ரஷ்யா: அதிபர் விளாடிமிர் புடின் தென்னாப்பிரிக்கா: அதிபர் சிரில் ரமபோசா ஈரான்: அதிபர் மசூத் பெஷெஷ்கியான் எகிப்து: அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி எத்தியோப்பியா: பிரதமர் அபி அகமது இந்தோனேசியா: அதிபர் பிரபோவோ சுபியாண்டோ ஐக்கிய அரபு அமீரகம் (UAE): பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் பிரேசில்: வெளியுறவு அமைச்சர் மௌரோ வியரா முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/pm-modi-and-iranian-president-to-meet-today-crucial-consultations-amidst-the-west-asian-conflict




