ஈரோடு, அதிகரித்து வரும் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஈரோடு வழியாக செல்லும் 6 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தலா ஒரு 'ஸ்லீப்பர் கிளாஸ்' பெட்டி தற்காலிகமாக கூடுதலாக இணைக்கப்பட உள்ளது. அதன் படி கோவை சந்திப்பில் இருந்து இரவு 7.30 மணிக்கு புறப்படும் கோவை -நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண் 22668) இன்று (செவ் வாய்க்கிழமை) முதல் அடுத்த ஆண்டு (2027) ஜனவரி மாதம் 4-ந்தேதி வரையும், நாகர்கோவில் சந்திப்பில் இருந்து இரவு 9.55 மணிக்கு புறப்படும் நாகர்கோவில் -கேவை எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண் 22667) நாளை (புதன்கிழமை) முதல் வருகிற ஜனவரி மாதம் 5-ந்தேதி வரையும் ஒரு 'ஸ்லீப்பர் கிளாஸ்' பெட்டி கூடுதலாக இணைக்கப்படும். இதேபோல் காரைக்காலில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்படும் காரைக்கால்-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண் 16187) இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஜனவரி மாதம் 5-ந்தேதி வரையும், எர்ணாகுளம் சந்திப்பில் இருந்து இரவு 10.25 மணிக்கு புறப்படும் எர்ணாகுளம் -காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண் 16188) நாளை (புதன்கிழமை) முதல் வருகிற ஜனவரி மாதம் 6-ந்தேதி வரையும் ஒரு 'ஸ்லீப்பர் கிளாஸ்' பெட்டி இணைக்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமைகளில் கோவை சந்திப்பில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்படும் கோவை -ராமேஸ்வரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண் 16618) வரு கிற 6-ந்தேதி முதல் டிசம்பர் மாதம் 29-ந்தேதி வரையும், புதன்கிழமை களில் இரவு 8.15 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் ராமேஸ்வரம் -கோவை வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண் 16617), வருகிற 7-ந்தேதி முதல் டிசம்பர் மாதம் 30-ந்தேதி வரை ஒரு 'ஸ்லீப்பர் கிளாஸ்' பெட்டியும் கூடுதலாக இணைக்கப்பட உள்ளதாக சேலம் ரெயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/extra-coaches-to-be-attached-to-6-trains-passing-through-erode




