புதுடெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் மக்களவை எம். பி.க்கள் 20 பேர் தனியாக விலகி தேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைந்துள்ளனர். இவர்களுக்கும், மம்தா பிரிவு எம்.பி.க்களுக்கும் இடையே நேற்று மக்களவையில் மோதல் ஏற்பட்டது. அப்போது மம்தா ஆதரவு எம்.பி.யான கல்யாண் பானர்ஜி, எதிர் தரப்பை சேர்ந்த சில பெண் எம்.பி.க்களை தகாத முறை யில் பேசியதாக தெரிகிறது. இது குறித்து அவர்கள் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் புகார் அளித்தனர். எனவே கல்யாண் பானர்ஜியை எஞ்சிய கூட்டத்தொடர் முழுவதுமாக இடைநீக்கம் செய்யும் தீர்மானத்தை பிற்பகலில் மத்திய மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் கொண்டு வந்தார். இது எதிர்க்கட்சியினரின் அமளிக்கு மத்தியில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. இதைத்தொடர்ந்து அவரை சபை வளாகத்தை விட்டு வெளியேறுமாறு அப்போது சபையை நடத்திய கிருஷ்ண பிரசாத் தென்னட்டி அறிவுறுத்தினார். இது மம்தா ஆதரவு திரிணாமுல் காங்கிரசார் மட்டுமின்றி எதிர்க் கட்சி எம்.பி.க்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/trinamool-congress-mp-suspended-from-lok-sabha




