மும்பை, விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் தொடங்க உள்ள நிலையில் தாராவி உள்பட 4 ரெயில்வே நடைமேம்பாலங்களை மூடுவதாக மத்திய ரெயில்வே அறிவித்து உள்ளது. மும்பையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் நாளை (திங்கட்கிழமை) தொடங்கி 25-ந் தேதி வரை நடக்கிறது. கொண்டாட்டத்தின் போது பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலங்கள் நடைபெறும். இதில் திரளாக மக்கள் கலந்து கொள்வார்கள். இந்தநிலையில் மஸ்ஜித் ரெயில் நிலைய நடைமேம்பாலம், மஸ்ஜித் பகுதியில் உள்ள பண்டாரி நடைமேம்பாலம், பாவுதாஜி ரோட்டில் உள்ள மாட்டுங்கா ரெயில்வே நடைமேம்பாலம், சயான் குருநானக் பள்ளி அருகில் மாட்டுங்கா சயான் ரெயில் நிலையம் இடையே உள்ள தாராவி நடைமேம்பாலம் உடனடியாக மூடப்படுவதாக மத்திய ரெயில்வே அறிவித்து உள்ளது. சமீபத்தில் மும்பை மாநகராட்சி, ரெயில்வே நிர்வாகம் சார்பில் மும்பையில் உள்ள பாலங்களில் மும்பை ஐ.ஐ.டி. நிபுணர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் 4 நடைமேம்பாலங்களும் ஆபத்தான நிலையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக அந்த நடைமேம்பாலங்களை இடித்து, புதிய நடைமேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த தகவலை மத்திய ரெயில்வே தெரிவித்து உள்ளது. நடைமேம்பாலம் திடீரென மூடப்பட்டது தாராவி மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தாராவியை சேர்ந்த மாணவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானவர்கள் இந்த நடைமேம்பாலத்தை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/four-pedestrian-bridges-in-mumbai-to-close-ahead-of-ganpati-festival




