பெங்களூருவில் இந்திய அறிவியல் கழகம் உள்ளது. அங்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இஸ்ரோ தலைவர் நாராயணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் அவர் பேசியதாவது:- 2047-ம் ஆண்டு இந்தியா வளர்ந்த நாடாக மாற பிரதமர் மோடிக்கு ஒரு தெளிவான தொலை நோக்கு பார்வை உள்ளது. நமது நாடு 100-வது சுதந்திர தின விழா கொண்டாடுவதற்கு முன்பு நமது வல்லரசு நாடாக உருவாகும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இஸ்ரோ நமது நாடு சுதந்திரம் அடைந்தபோது வறுமையில் இருந்தது. படிப்படியாக நாம் வளர்ந்து இன்று உலகின் 4-வது பெரிய பொருளாதார பல மிக்க நாடாக மாறியுள்ளது. சுகாதாரம், விவசாயம், மின்சாரமயம், அறிவியல் துறைகளில் நாம் பெரிய அளவுக்கு வளர்ந்துள்ளோம். நீங்கள் தொடர்ந்து படித்துக் கொண்டே இருங்கள். அறிவியல், பொறியியலில் ஆய்வு செய்யுங்கள்.நீங்கள் கடுமையாக உழைத்து நேர்மை, குழுவாக பணியாற்றுதல், தன்னம்பிக்கையுடன் செயலாற்ற வேண்டும். கல்வியில் வளர இந்த தகுதிகள் அவசியம். இஸ்ரோவில் நாங்கள் ஒரு குழுவாக இணைந்து பணியாற்றுவதால்தான் வெற்றியை பெறுகிறோம். நாங்கள் இதுவரை 105 ராக்கெட்டுகள், 135 செயற்கைக்கோள்களை தயாரித்து விண்ணில் ஏவியுள்ளோம். விண்வெளி திட்டம் நிலவின் கோளப்பாதையில் இந்தியாவுக்கு ஒரு நல்ல கேமரா உள்ளது. அதனால் நிலவின் சிறந்த புகைப்படங்கள் இந்தியாவுக்கு கிடைக்கிறது. சந்திரயான்-3 திட்டம் மூலம் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய ஒரே நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு உள்ளது. நாம் சுதந்திரம் அடைந்து 15 ஆண்டுகளுக்கு பிறகே விண்வெளி திட்டத்தை தொடங்கி னோம். இந்தியா முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரக கோளப்பாதையில் விண்கலத்தை நிலை நிறுத்தினோம். வேறு எந்த நாடும் இதை சாதிக்க வில்லை. வருகிற 2035-ம் ஆண்டுக்குள் இந்தியா தனது சொந்த விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை அமைக்க உள்ளது. 2040-ம் ஆண்டுக்குள் இந்தியர்கள் விண்ணில் இறங்குவார்கள். நாங்கள் தொடர்ந்து ககன்யான் திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.இவ்வாறு அவர் பேசினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/india-will-set-up-a-space-station-by-2035-isro-chairman-narayanan




