ஈரான், ஹார்முஸ் நீரிணை இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் மீது அமெரிக்கா ராணுவம் கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் உச்ச தலைவர் உள்பட பலர் கொல்லப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உலகநாடுகளில் 30 சதவீதத்துக்கு மேல் எரிபொருள் வினியோகம் செய்ய பயன்படுத்தப்படும் ஹார்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்தது.6 மாதங்களுக்கு மேலாக நீடித்து வரும் இந்த தாக்குதல் மற்றும் பிரச்சி னையில் ஹார்முஸ் நீரிணையை கைப்பற்றும் முயற்சியில் அமெரிக்கா பெரும் தோல்வி அடைந்தது. இது நேரடியாக ஈரானுக்கு சாதகமாக அமைந்தது. இதனிடையே ஹார்முஸ் நீரிணையை ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி முழுவதுமாக கைப்பற்றும் முயற்சியில் அமெரிக்கா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ஈரான் மிரட்டல். இந்த நிலையில், வளைகுடா நாடுகளில் இருந்து ஒரு சொட்டு எண்ணெய் கூட ஏற்றுமதி செய்ய முடியாதபடி ஆக்குவோம் என ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ECONOMIC D-DAY என்ற பெயரில் ஈரானின் வாழ்வாதாரத்தை முடக்கும் வகையிலான புதிய தடைகளை விதிக்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ள சூழலில், கச்சா எண்ணெய் ஏற்றுமதி முழுமையாக முடக்கப்படும் என ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது. மேலும் ஹார்மூஸ் நீரிணையில் விதிமுறைகளை மீறும் கப்பல்களுக்கு அபராதம், சிறைபிடித்தல், பறிமுதல் போன்ற கடுமையான புதிய தண்டனைகள் வழங்கப்படும் என்று ஈரான் அறிவித்துள்ளது. விதிகளை மீறும் கப்பல்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படும் எனவும் அவற்றுடன் வர்த்தகத் தொடர்புகள் வைக்கும் பிற கப்பல்களும் உடனடியாக பட்டியலில் சேர்க்கப்படும் என்றும் ஈரான் அரசு தெரிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/world/not-even-a-single-drop-of-oil-can-be-exported-irans-threat




