மலப்புரம், மலப்புரத்தில் பெண்ணை கொன்று உடலை கடலில் வீசிய கணவர் கைது செய்யப்பட்டார். விசாரணை கேரளம் மாநிலம் மலப்புரம் மாவட்டம் திரூர் அருகே உள்ள படிங்காரக்கரா பகுதியை சேர்ந்தவர் உசைன் (வயது 42). மீனவர். இவரது மனைவி பவுசியா (37). இவரை கடந்த சில நாட்களாக காணவில்லை. இதனால் அவரை உறவினர்கள் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவர்கள் திரூர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தேடி வந்தனர். இந்தநிலையில் அதே பகுதியில் உள்ள கடலில் மீன் பிடிக்க மீனவர்கள் படகில் செல்ல முயன்றனர். அப்போது மீனவர்கள் கடலில் சாக்கு மூட்டை கிடப்பதை பார்த்தனர். அதை கடலில் இருந்து எடுத்து, பிரித்து பார்த்த போது. சாக்கு மூட்டைக்குள் பெண் உடல் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மீனவர்கள் திரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை பார்வையிட்டு விசாரித்தனர். அப்போது மாயமான பவுசியா இறந்து கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் உசைனிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். சம்பவத்தன்று இரவு படகில் இருந்த மீன்களை அள்ள வேண்டும் என்று கூறி பவுசியாவை தன்னுடன் அழைத்துச் சென்றார். அங்கு வைத்து பவுசியாவை கழுத்தை நெரித்து கொன்றார். இந்த சம்பவம் வெளியே தெரியாமல் இருக்க, உடலை கடலில் வீச திட்டமிட்டார். கைது அதன்படி உடலை சாக்கில் கட்டி கடலில் வீசியது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் உசைனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர். தனது மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். பவுசியா தனது கணவரின் அனுமதியின்றி சில வீடுகளில் வேலைக்கு சென்றார். இதை உசைன் கண்டித்து உள்ளார். அதை பொருட்படுத்தாமல் வேலைக்கு சென்றதால், ஆத்திரம் அடைந்த உசைன் தனது மனைவியை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/wife-reported-missing-body-recovered-from-sea-husband-arrested




