காசிமேடு, சேதமடைந்த கழிவுநீர் குழாய் சீரமைக்கும் பணி காரணமாக காசிமேட்டில் இன்று முதல் 15 நாட்கள் போக்குவரத்து மாற்றம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. போக்குவரத்து மாற்றம் சென்னை காசிமேடு சிக்னல் அருகே உள்ள எஸ்.என்.செட்டி சாலை மற்றும் ஜீவரத்தினம் சாலை சந்திப்பில் சேதமடைந்த கழிவுநீர் குழாயை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக இன்று(வியாழக்கிழமை) முதல் 15 நாட்களுக்கு பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் அமல்படுத்தப்படும். அதன்படி எஸ்.என். செட்டி சாலை ஜீவரத்தினம் சாலை சந்திப்பு வழியாக எண்ணூர் செல்லும் (வெளியேறும் திசை) பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் ஜீவரத்தினம் சாலை வழியாக திருப்பிவிடப்படும். அங்கிருந்து இடதுபுறம் திரும்பி, பின்னர் வலதுபுறம் திரும்பி வி.பி. கோவில் தெரு டி.எச். சாலை டி.எச். சாலை சுங்கச்சாவடி சந்திப்பு வழியாக தங்கள் இலக்கை அடைய வேண்டும். இருசக்கர வாகனங்கள் எஸ்.என். செட்டி சாலை ஜீவரத்தினம் சாலை சந்திப்பு வழியாக எண்ணூர் செல்லும் (வெளியேறும் திசை) இருசக்கர வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் ஜீவரத்தினம் சாலை வழியாக திருப்பி விடப்படும் அங்கிருந்து இடதுபுறம் திரும்பி, பின்னர் வலதுபுறம் திரும்பி வி.பி. கோவில் தெரு டி.எச். சாலை வழியாகச் சென்று, டி.எச். சாலை மெட்ரோ ரெயில் அருகே 'யு' வளைவில் திரும்பி இடதுபுறம் பாலகிருஷ்ணா தெருவுக்கு திரும்பி தங்கள் இலக்கை அடைய வேண்டும். எண்ணூரில் இருந்து எஸ்.என். செட்டி சாலை வழியாக பாரிமுனை நோக்கி (உள்வரும் திசை) வரும் இருசக்கர வாகனங்கள், இலகுரக வாகனங்கள், பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள். எஸ்.என். செட்டி சாலை -பவர் குப்பம் சந்திப்பு (முஸ்லிம் அடக்கஸ்தலத்துக்கு எதிரே) பகுதியில் உள்ள வெளியேறும் திசைக்கு (எதிர் திசையில்) திருப்பி விடப்படும். அங்கிருந்து இடதுபுறம் திரும்பி எஸ்.என். செட்டி சாலை காசிமேடு சிக்னல் சந்திப்பு (உள்வரும் திசை) வழியாக தங்கள் இலக்கை அடைய வேண்டும். மேற்கண்ட போக்குவரத்து மாற்றத்துக்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு போக்குவரத்து போலீசார் கேட்டு கொண்டுள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/traffic-changes-in-kasimedu-for-15-days-from-today




