தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் கார்டுகளில் திருத்தம் செய்ய சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நாளை நடைபெற உள்ளது என்று மாவட்ட கலெக்டர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் விஷு மகாஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் பொது விநியோகத்திட்டம் சிறப்பாக நடைபெற, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் 2026-ம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான சிறப்பு முகாம் நாளை (11.7.2026, சனிக்கிழமை) அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அந்தந்த வட்டங்களில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. ஸ்மார்ட் கார்டுகளில் திருத்தம் இந்த முகாமில் மின்னணு குடும்ப அட்டையில் (ஸ்மார்ட் கார்டு) முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், உறுப்பினர் சேர்த்தல் மற்றும் நீக்குதல், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் அட்டை கோருதல் போன்ற குறைகள் முகாமில் சரிசெய்து வழங்கப்பட உள்ளது. மேலும் மின்னணு குடும்ப அட்டைகளுக்குரிய தவறுகளில் குடும்பத்தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டியிருப்பின் முகாமிலேயே புகைப்படம் பதிவேற்றம் செய்யப்படும். மேலும் இந்த முகாமில் பொது விநியோகத்திட்டம் தொடர்பான குறைகளையும் தெரிவித்து பொதுமக்கள் பயன்பெற்றுக் கொள்ளலாம். எனவே பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமில், குறைகள் இருப்பின் மனு செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/special-camp-tomorrow-to-correct-smart-cards-thoothukudi-collector-informs




