சென்னை, மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவும் சூழ்நிலையில், யாருக்கு வெற்றி வாய்ப்பு என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ந் தேதி தொடங்கியுள்ள நிலையில், இடைத்தேர்தலிலும் த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் ஆகிய கட்சிகள் இடையே 4 முனைப்போட்டி நிலவுகிறது. வேட்பாளர்கள் யார்? இதில், நாம் தமிழர் கட்சியை தவிர, தேர்தல் களம் காணும் 3 கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. கடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்தியபாமா (தாராபுரம்) ஆகிய 2 பேரும் தற்போது த.வெ.க. சார்பில் அதே தொகுதிகளில் களம் காண்கின்றனர். பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. சார்பில் ஐ.பரந்தாமன் (மதுராந்தகம்), எஸ்.சுகன்யா (தாராபுரம்) ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத் (மதுராந்தகம்), பானுமதி (தாராபுரம்) ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதிமுக வேட்பாளர்கள் மதுராந்தகம் தொகுதி வரலாறு செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் தொகுதி 1952-ம் ஆண்டு முதல் சட்டசபை தேர்தலை சந்தித்து வருகிறது. 3 முறை (1952, 1957, 1962) காங்கிரஸ் கட்சியும், 7 முறை (1980, 1989, 1991, 2001, 2011, 2021, 2026) அ.தி.மு.க.வும், 6 முறை (1967, 1971, 1977, 1984, 1996, 2016) தி.மு.க.வும் வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க.வின் கோட்டையான மதுராந்தகம் தொகுதியில் 2026 சட்டசபை தேர்தலில் மொத்தம் பதிவான 1 லட்சத்து 96 ஆயிரத்து 268 வாக்குகளில், அ.தி.மு.க. வேட்பாளராக களம் இறங்கிய மரகதம் குமரவேல் 69,284 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்டவர்களில், த.வெ.க. வேட்பாளர் எழில் கேத்தரின் 62,090 வாக்குகள் பெற்று 2-வது இடம்பிடித்தார். இருவருக்குமான வித்தியாசம் 7,194 வாக்குகள் ஆகும். தி.மு.க. வேட்பாளர் அமுலு பொன்மலர் 59,838 வாக்குகள் பெற்று 3-வது இடத்தையும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகி ராமன் 4,950 வாக்குகளுடன் 4-வது இடத்தையும் பிடித்தனர். திமுக வேட்பாளர்கள் தாராபுரம் தொகுதி வரலாறு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் தொகுதி 1951-ம் ஆண்டு முதல் தேர்தலை சந்தித்து வருகிறது. முதல் தேர்தலில் மட்டும் சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றார். அதன்பிறகு நடைபெற்ற தேர்தலில் 6 முறை (1967, 1971, 1989, 1996, 2006, 2021) தி.மு.க.வும், 6 முறை (1977, 1980, 1984, 1991, 2011, 2026) அ.தி.மு.க.வும் வெற்றி பெற்று சம பலத்துடன் உள்ளன. மேலும், 1957, 1962 ஆகிய தேர்தல்களில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, 2016-ம் ஆண்டு தி.மு.க.வுடன் கைகோர்த்து வெற்றி பெற்றது. அதேபோல், 2001-ம் ஆண்டு அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற பா.ம.க. வெற்றி வாகை சூடியுள்ளது. 16,700 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி தாராபுரம் தொகுதியில், 2026 சட்டசபை தேர்தலில் மொத்தம் பதிவான 1 லட்சத்து 99 ஆயிரத்து 944 வாக்குகளில், அ.தி.மு.க. வேட்பாளர் சத்யபாமா 81,100 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்டவர்களில், தி.மு.க. வேட்பாளர் இந்திராணி 64,373 வாக்குகள் பெற்று 2-வது இடம்பிடித்தார். இருவருக்குமான வித்தியாசம் 16,727 வாக்குகள் ஆகும். த.வெ.க. வேட்பாளர் கவுரி சித்ரா 46,438 வாக்குகள் பெற்று 3-வது இடத்தையும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் திவ்யா 6,026 வாக்குகள் பெற்று 4-வது இடத்தையும் பிடித்தனர். த.வெ.க. அரசுக்கு நெருக்கடி குறையும் இந்த நிலையில்தான், அக்டோபர் 6-ந் தேதி மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகள் இடைத்தேர்தலை சந்திக்க இருக்கின்றன. பொதுவாக, இடைத்தேர்தலை ஆளுங்கட்சியை எடைபோடும் தேர்தல் என்று சொல்வார்கள். அந்த வகையில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள த.வெ.க.வுக்கு இடைத்தேர்தல் சாதகமாக அமையுமா? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவுகிறது. ஏற்கனவே, த.வெ.க. அரசுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. 107 இடங்களையே வைத்துள்ள அக்கட்சிக்கு, தனி மெஜாரிட்டி கிடைக்க மேலும் 11 தொகுதிகள் தேவை. இடைத்தேர்தலில் 2 தொகுதிகளிலும் த.வெ.க. வெற்றி பெற்றால், சற்று நெருக்கடி குறையும். வெற்றி வாய்ப்பு எப்படி? த.வெ.க. அரசின் 4 மாத ஆட்சியில், ஊழல் ஒழிப்பு கொள்கை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுபோக, கடந்த தேர்தலில் 'தனி ஒருவன்' போல் களம் இறங்கிய த.வெ.க., இந்த முறை காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதனால், இவ்விரு தொகுதிகளிலும் த.வெ.க. வேட்பாளர்களுக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இரு வேட்பாளர்களுக்கும் 45 சதவீதம் அளவுக்கு குறையாமல் வாக்குகள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. பிரசாரத்திற்கு விஜய் வருவாரா? இரு தொகுதிகளுக்கும் தேர்தல் பிரசாரத்திற்கு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் நேரில் சென்றால், த.வெ.க. வேட்பாளர்களுக்கு வாக்கு சதவீதம் இன்னும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளில் த.வெ.க. வெற்றி பெற்றால், முதல் முறையாக வெற்றிக் கனியை பறித்து, சட்டமன்ற தொகுதிகள் எண்ணிக்கையை மேலும் அதிகரித்துக்கொள்ளும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-constituency-by-elections-who-has-the-winning-chance-in-the-four-cornered-contest




