ஓசூர், ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை அருகில் சீதாராம் மேடு பகுதியில் வணிக வரித்துறை அலுவலகத்தில் பணியாற்றிய ஜி.எஸ்.டி. அதிகாரி ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்டார். ரூ.1 லட்சம் லஞ்சம் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை அருகில் சீதாராம் மேடு பகுதியில் வணிக வரித்துறை அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு சேலம் சூரமங்கலம் ஆண்டிப்பட்டி காலனியை சேர்ந்த கலையரசன் (வயது45) என்பவர் மாநில வரி அலுவலராக (ஒசூர் வடக்கு) பணியாற்றி வருகிறார். ஒசூர் ஜூஜூவாடி பகுதியை சேர்ந்த நம்பி(75) என்ற தொழிலதிபர், ஜி.எஸ்.டி. தொகையை பெறுவதற்காக கலையரசனை அணுகினார். அப்போது அவர் 1 லட்சம் ரூபாய் கொடுத்தால் முடித்து தருவதாக கூறியுள்ளார். ஜி.எஸ்.டி. அதிகாரி கைது ஆனால் லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத நம்பி, இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. ஜெயகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரவி உள்ளிட்ட போலீசார் அங்கு வந்தனர். அவர்களின் அறிவுறுத்தலின்படி ரசாயனம் தடவிய பணத்தை கலையரசனிடம் நம்பி கொடுக்கும்போது அவர் கையும், களவுமாக பிடிபட்டார். இதனை தொடர்ந்து போலீசார் கலையரசனிடம் விசாரணை நடத்தி, பின்னர் அவரை கைது செய்தனர். தொடர்ந்து வணிக வரித்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இந்த சம்பவம் ஒசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/gst-officer-arrested-for-accepting-rs1-lakh-bribe-in-hosur




