நேற்று துபாயில் இருந்து இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் நகரத்திற்கு ஃபிளைதுபாய் விமானம் ஒன்று பறந்தது. இந்த விமானத்தில் 174 பயணிகள் பயணித்திருக்கின்றனர். பயணத்திற்கு இடையே இரு விமானிகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது சக விமானியை இன்னொரு விமானி கத்தியால் குத்தியுள்ளார். கத்திக்குத்துப்பட்ட நிலையிலுமே அந்த விமானி விமானத்தைப் பாதுகாப்பாக சவூதி அரேபியாவில் உள்ள விமான நிலையம் ஒன்றில் தரையிறக்கியுள்ளார். கத்திக்குத்தப்பட்ட விமானியின் பெயர் ஸ்மித் மச்சார். இவர் இந்தியாவைச் சேர்ந்தவர் ஆவார். மோடி பதிவு“திமுக-அதிமுக கூட்டணிக்குப் பேசவில்லை; தவெகவுடன்தான் பேசினோம்” - TTV தினகரன் ட்விஸ்ட் இன்னொரு விமானியின் பெயர் வெளியிடப்படவில்லை. இஸ்ரேலின் தகவலின்படி, அவர் ஓமன் நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். தான் காயமடைந்தாலும், தன்னுடைய பயணிகளைக் காப்பாற்ற வேண்டும் என்கிற ஸ்மித் மச்சாரின் எண்ணத்தையும், தைரியத்தையும் உலக நாடுகள் பாராட்டி வருகின்றன. மோடி பாராட்டு இந்தியப் பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு உண்மையான வீரர்! மிகப்பெரிய உயிராபத்து மற்றும் தீவிர காயம் அடைந்த நிலையிலும் கூட, மற்றவர்களின் உயிரைக் காக்க அவர் காட்டிய அளப்பரிய தைரியமும் அசையாத மன உறுதியும் மெய்சிலிர்க்க வைக்கிறது. அவரது இந்த வீரமிக்க செயலால் நூற்றுக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டு, ஒரு பெரிய பேரழிவு தவிர்க்கப்பட்டுள்ளது. கேப்டன் மச்சாரை நினைத்து இந்தியா பெருமிதம் கொள்கிறது. அவர் விரைவில் குணமடைந்து, முழு ஆரோக்கியத்துடனும் புத்துணர்வுடனும் மீண்டு வர இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று ஸ்மித் மச்சாரைப் பாராட்டியுள்ளார். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் ஸ்மித் மச்சாரைப் பாராட்டியுள்ளார். “கேப்டன் ஸ்மித் மச்சாரின் ஈடு இணையற்ற தைரியத்திற்கு எனது வீரவணக்கங்கள்! நெதன்யாகு பதிவு‘Tata Sons-ஐ பட்டியலிடக் கூடாது’: சந்திரசேகரனால் பிரச்னையா? நோயல் டாடாவின் Loop Hole என்ன? கத்தியால் குத்தப்பட்டுத் தீவிர காயமடைந்த நிலையிலும், அவர் பின்வாங்காமல் போராடி, மன உறுதியுடன் விமானத்தின் காக்பிட் கதவைத் திறந்திருக்கிறார். இதன் மூலம் பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் இணைந்து அந்தத் தாக்குதல்காரரை மடக்கிப் பிடிக்க முடிந்தது. இதனால் ஒரு மிகப்பெரிய ஆகாயப் பேரழிவு தவிர்க்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய குடிமக்கள் மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் உட்பட 174 பேரின் உயிர்களை அவர் காப்பாற்றியுள்ளார். கேப்டன் மச்சார் விரைவில் பூரண குணமடைய என் மனமார்ந்த வாழ்த்துகள். அவர் ஒரு உண்மையான வீரர்!” முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/government-and-politics/pm-modi-praises-indian-pilot-injured-in-mid-air-stabbing




