புதுடெல்லி, இந்தியாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, 20 சதவீத எத்தனால் கலக்கப்பட்ட 'இ20' பெட்ரோல் பயன்பாடு முழு வீச்சில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்திய எண்ணெய் நிறுவனங்கள்பூடான் நாட்டிற்கும் இந்த E20 பெட்ரோலை வினியோகம் செய்ய முன்வந்துள்ளன. ஆனால், இந்த சலுகையை ஏற்க பூடான் நாட்டின் வர்த்தகத் துறை அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. தற்போதைய சூழலில் இந்தியாவில் இருந்து இ20 பெட்ரோலை இறக்குமதி செய்யும் எண்ணம் ஏதும் இல்லை என்று பூடான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து பூடான் அரசுத் துறை அதிகாரிகள் மற்றும் அந்த நாட்டின் மிகப்பெரிய எரிபொருள் வினியோக நிறுவனமான 'தாஷி பி.ஓ.டி' ஆகியவை சில காரணங்களை பட்டியலிட்டுள்ளது. அதாவது சாதாரண பெட்ரோலை விட எத்தனால் கலந்த பெட்ரோல் காற்றில் உள்ள ஈரப்பதத்தையும், தண்ணீரையும் எளிதில் உறிஞ்சும் தன்மை கொண்டது. பூடானில் உள்ள பெரும்பாலான பெட்ரோல் பங்க் நிலத்தடி சேமிப்புத் தொட்டிகள் மிகவும் பழமையானவை. மேலும், பூடான் ஒரு மலைப்பிரதேசம் என்பதால் நிலத்தடி நீர் இந்தத் தொட்டிகளுக்குள் கசிந்து வர அதிக வாய்ப்புள்ளது. சிறிதளவு தண்ணீர் கசிவு ஏற்பட்டாலும், இ20 பெட்ரோலில் உள்ள எத்தனால் அந்தத் தண்ணீரை உறிஞ்சி, எரிபொருளின் தரத்தையே மாற்றிவிடும். அதாவது பெட்ரோல் பால் போன்ற நிறத்திற்கு மாறிவிடும்.இதனால் வாகனங்களின் இன்ஜின்கள் முற்றிலும் பழுதடைந்து, வண்டிகள் பாதியிலேயே நின்றுவிடும் அபாயம் உள்ளது. மலைப்பாங்கான சாலைகளில் வாகனங்களை இயக்க அதிக சக்தி தேவைப்படுகிறது. ஆனால், எத்தனால் கலந்த பெட்ரோல் போதிய மைலேஜ் மற்றும் எனர்ஜியைத் தராது என்பதால் பூடான் நாட்டின் மலைப்பாதைகளுக்கு இது துளியும் சரிவராது என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/world/vehicles-would-break-down-bhutan-refuses-to-buy-petrol-from-india




