சென்னை, தங்கம் விலை தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. கடந்த 18-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,05,080-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,135-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஞாயிறு விடுமுறை தினமான நேற்று முன் தினம் தங்கம் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி விற்பனையானது. வார தொடக்கமான நேற்று சற்று உயர்ந்தது. நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,05,200-க்கும், கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,150-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்றைய தங்கம் விலை இந்த நிலையில், தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,05,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,220-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி வெள்ளி ஒரு கிராம் ரூ.5 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.240-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-prices-have-risen-again-what-is-the-situation-today




