கோவை, கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு அரசு பேருந்துகள் ரங்கே கவுண்டன்புதூர் மற்றும் வீரப்பகவுண்டனூர் வரை இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்த பேருந்துகளை, கேரள எல்லை வரை இயக்கும் வகையில் புதிய வழித்தடத்தை கிணத்துக்கடவு பேருந்து நிலையத்திலிருந்து மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விக்னேஷ், "முதல் கட்டமாக பள்ளி, கல்லூரி, கோவில்கள் அருகே உள்ள 717 கடைகளை அரசு மூடி நடவடிக்கை எடுத்துள்ளது. இன்னும் சில கடைகள் இதுபோன்ற இடங்களுக்கு அருகே உள்ளன. இந்த நடவடிக்கை மீண்டும் தொடரும்" என்று கூறினார். தமிழகத்தில் பல ஆண்டுகளாக கள் இறக்க அனுமதி வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருவது குறித்த கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "கள் இறக்க அனுமதி அளிப்பது குறித்து முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவரது வழிகாட்டுதலுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/permission-to-import-toddy-in-tamil-nadu-minister-vignesh-responds




