மதுரை, மதுரையில் அமைச்சர் முஸ்தபா இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் நாடாளுமன்றத்தில் 543 பேர் மக்களவை உறுப்பினர்களாக தொடர வேண்டும் என முதல்-அமைச்சர் ஏன் பேசவில்லை? என எதிர்க்கட்சிகள் விமர்சித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்தபோது அமைச்சர் முஸ்தபா கூறியதாவது;- “மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் தொகுதி மறுவரையறைக்கு தமிழக அரசாங்கம் சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டு தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளது. முதல்-அமைச்சருக்கு தெரியாமலா தீர்மானம் போட்டிருப்பார்கள்? தொகுதி வரையறை விவகாரத்தில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது. கடந்த காலத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தொகுதி மறுவரையறை தொடர்பான தாள்களை கிழித்துப் போட்டார். ஆனால் இன்று படித்து சொல்ல வேண்டும் என்கிறார். தி.மு.க. தொடர்ச்சியாகவே பா.ஜ.க.வுடன் கள்ளக் கூட்டணி வைத்திருந்தது. இன்று தி.மு.க.வின் நிலைப்பாடு மத்திய பா.ஜ.க. அரசை நோக்கி செல்கிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது.” இவ்வாறு அவர் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-is-playing-a-double-game-regarding-constituency-delimitation-tvk-mla-mustafa




