காத்மாண்டு, நேபாளத்தின் போடேகோஷி நதியில் கடந்த 26-ந்தேதி காலையில் ஏற் பட்ட பெருவெள்ளம் அந்த நாட்டின் சீன எல்லையை ஒட்டிய பிராந்தியம் முழுவதையும் சீர்குலைத்தது.போடேகோஷியின் கிளை நதியான லெண்டேயின் நீரோட்டத்தை பனிச்ச ரிவு ஒன்று தடுத்ததால் உருவான ஏரி உடைந்து இந்த காட்டாற்று வெள் ளம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வெள்ளம் மட்டுமின்றி பாறைகள், மண், சேறு என பெரும் பிரளயமே அங்கு ஏற்பட்டது.சுனாமி அலைகளையே மிஞ்சும் அளவுக்கு ஏற்பட்ட பெருவெள்ளம் கண் இமைக்கும் நேரத்தில் நீர்மின் நிலையங்கள், பாலங்கள், சாலைகள், செல்போன் கோபுரங்கள், வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் என அனைத் தையும் வாரிச்சுருட்டி சென்றது. சீனாவை ஒட்டியுள்ள நேபாளத்தின் 8 மாவட்டங்களை புரட்டிப்போட்ட இந்த பேரிடர், ரசுவா, நுவாகோட், தடிங் ஆகிய 3 மாவட்டங்களை முழு மையாக உருக்குலைத்து இருக்கிறது.சேறும், சகதியுமாக காட்சியளிக்கும் இந்த பிராந்தியம் முழுவதும் பார்ப் போரை பதறவைக்கிறது. இமயமலையில் இருந்து அடித்து வரப்பட்ட கற் கள், மண், சேறு, சகதி அனைத்தும் பல அடி உயரத்துக்கு நிறைந்து இருக்கிறது. 4-வது நாளாக மீட்புப்பணி ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ள நிலையில், அவர்களில் பலரும் உயிரிழந்திருப்பது கண்டறியப்பட்டு வரு கிறது. உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த பேரிடரில் பலியானோர் எண்ணிக்கை 626 ஆக உயர்ந்துள்ளது. 2,500-க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்பதால் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அதிகாரிகள் எச்சரிக்கை போடோகோஷி ஆற்றில் மீண்டும் சேறு மற்றும் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், மீண்டும் ஒரு வெள்ளம் ஏற்படலாம் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். போடோகோஷி மற்றும் திரிசுலி பகுதிகளில் இருக்கும் மக்கள் மற்றும் மீட்பு பணியாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/world/nepal-floods-death-toll-rises-to-600-intensive-efforts-underway-to-rescue-2500-missing-people




