சென்னை, இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் நெல்கட்டும்செவல் பாண்டிய மாமன்னர் பூலித்தேவரின் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;- பூலித்தேவர் சிலைக்கு மரியாதை முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பாண்டிய மன்னன் காத்தப்ப பூலித்தேவர் கி.பி.1715 முதல் 1767 வரை இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட மாமன்னர் ஆவார். அவருடைய 311 ஆவது ஜெயந்தி விழா, வருகின்ற 1.9.2026 செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் தென்காசி மாவட்டம் நெல்கட்டும்செவல், பாண்டியர்கள் சமஸ்தானத்தில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ப. மாணிக்கம் தாகூர், எம்.பி. கலந்து கொண்டு முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் நெல்கட்டும்செவல் பாண்டிய மாமன்னர் பூலித்தேவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். நடைபெறும் இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்டத் தலைவர் ஆலங்குளம் செல்வராஜ் முன்னிலையில், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் சி. ராபர்ட் புரூஸ், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் ரூபி ஆர். மனோகரன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எஸ்.எஸ். ராமசுப்பு, திருநெல்வேலி மாநகர் மாவட்ட தலைவர் எம். ராமேஸ்வரன், திருநெல்வேலி கிழக்கு மாவட்டத் தலைவர் வி.பி. துரை, திண்டுக்கல் மாநகர் மாவட்டத் தலைவர் துரை மணிகண்டன், தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் தலைவர் மா. சின்னதம்பி, முன்னாள் மாவட்டத் தலைவர்கள் எஸ். பழனி நாடார், கே. சங்கரபாண்டியன், வீ. கார்த்திகேயன், கொடிக்குறிச்சி முத்தையா, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கே. ரவி அருணன், ஊத்துமலை ஜமீன்தார் முரளிராஜா, மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள், துறைகள், பிரிவுகளின் தலைவர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் வட்டார, நகர, பேரூர் காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/puli-thevars-birthday-congress-pays-tribute-at-the-pandya-kingdoms-seat




