சென்னை, தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், தமிழ்நாட்டின் முதல்-அமைச்சருமான விஜய் நடித்த கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ பல்வேறு பிரச்சினைகளைத் தாண்டி ஒரு வழியாக இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ளது. முதல்-அமைச்சராக முதல் படம், சினிமாவில் கடைசி படம் என்ற சூழ்நிலையில் வெளியாகியுள்ளதால் விஜய்யின் ரசிகர்களும் தவெக தொண்டர்களும் படத்தைத் திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர். ரசிகர்கள் கொண்டாட்டம் வழக்கம் போல் திரையரங்கில் பேனர், பட்டாசு, டிஜே கச்சேரி என நேற்று (22.07.2026) இரவு முதலே ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே முதல்-அமைச்சர் விஜய் நேற்று இரவு சென்னை அடையாறு தாகூர் திரைப்பட கல்லூரியில் படம் பார்த்து மகிழ்ந்தார். இந்நிலையில் தமிழகத்தில் ஜனநாயகன் திரைப்படத்தின் முதல் காட்சி இன்று காலை 09.00 மணியளவில் பெரும்பாலான திரையரங்குகளில் தொடங்கியது. இதனையொட்டி விஜய்யின் ரசிகர்கள் இந்தத் திரைப்படத்தின் வெளியீட்டைக் கோலாகலமாகக் கொண்டாடி வரும் வேளையில், தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர் முகமது பர்வேஷும் இத்திரைப்படத்தை புதுக்கோட்டையில் உள்ள தியேட்டரில் கண்டுகளித்தார். கண்ணீர் விட்ட அமைச்சர் அச்சமயத்தில் ஜனநாயகன் திரைப்படத்தின் விஜய் அறிமுகம் ஆகும் காட்சிகளைக் கண்ட அமைச்சர் முகமது பர்வேஷ், தேம்பி தேம்பி அழுது ஆனந்தக் கண்ணீர் விட்டார். தனது தலைவனின் கடைசி படத்தை பார்த்த அமைச்சர் பர்வேஷ், திரையரங்கில் தேம்பி தேம்பி கண்ணீர் விட்டு அழுத நிகழ்ச்சி அங்கு இருந்தவர்களையும் கண்கலங்க வைத்தது. ஜனநாயகன் படத்தின் தொடக்கத்தில், கடந்த 30 வருடங்களாக விஜய் நடித்த படங்களின் தொகுப்பானது ஒளிபரப்பபட்டது. அறந்தாங்கி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சரான பர்வேஷ், அதற்கு முன்னர் விஜய் ரசிகர் மன்றத்தில் மாவட்ட மற்றும் மாநில அளவிலான பொறுப்புகளை வகித்தார். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/the-minister-burst-into-tears-while-watching-the-movie-janyayan




