தவெக ஆட்சியைக் கவிழ்க்க ஊத்தங்கரை எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் பேரம் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் திருவல்லிக்கேணி போலீசார் இதுவரை 8 பேரைக் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் தனியார் தொலைக்காட்சியைச் சேர்ந்த பத்திரிகையாளர் விஜயனை திருவல்லிக்கேணி காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று மொபைல் போனைப் பறிமுதல் செய்து காவல் நிலையத்திலேயே காக்க வைத்ததாக தகவல் வெளியானது. பத்திரிகையாளர் விஜயன் இந்நிலையில் பத்திரிகை சுதந்திரத்தை தவெக அரசு நசுக்கிறது என அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தவெக அரசைக் கண்டித்து முன்னாள் சபாநாயகர் அப்பாவு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். கூடங்குளம் தரவுகள் கசிவு: 'நாட்டின் பாதுகாப்பு குறித்த கவலையை எழுப்பியுள்ளது'- மாணிக்கம் தாகூர் இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான புதிய தலைமுறையில் பணியாற்றி வரும் அறிவுசார்ந்த நெறியாளர் திரு. விஜயன் அவர்களை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யாமலும், விசாரணைக்கு அழைக்காமலும் நள்ளிரவில் கைது செய்து செல்போனைப் பறிமுதல் செய்து அவர் எந்தக் காவல் நிலையத்தில் இருக்கிறார் என்பதைக் கூட தெரியப்படுத்தாமல் அலக்கழித்த சம்பவம் தமிழக காவல்துறைக்கு ஒரு கரும்புள்ளியாகக் கருதப்படுகிறது. முதல்வர் விஜய் தமிழக காவல்உளவுத்துறை தலைவர், தமிழக முதல்வரைச் சந்திக்க முடியவில்லை என்று புலம்பும் நிலையில், CM சார் காவல்துறை உங்கள் கட்டுப்பாட்டில் உள்ளதா? அல்லது உங்களைச் சுற்றி இருக்கும் Reels Mafiaக்களின் கட்டுப்பாட்டில் உள்ளதா? ஜனநாயகத்தின் பத்திரிகைச் சுதந்திரத்தைப் பறிக்க துடிக்கும் தமிழக முதல்வரை வன்மையாகக் கண்டிக்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/government-and-politics/puthiya-thalaimurai-tv-journalist-vijayan-tn-police-investigation-appavu-condemns




