சென்னை கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் நெல் மழையில் நனைந்ததா? இல்லையா? என தி.மு.க.-த.வெ.க. அவையில் வாதத்தில் ஈடுபட்டனர். தமிழக சட்டசபையில் காலை 9.30 மணிக்கு இன்றைய அலுவல்கள் தொடங்கின. கூட்டம் தொடங்கியதும், நேரமில்லா நேரம் எடுத்து கொள்ளப்பட்டது. கேள்வி நேரம் எடுத்து கொள்ளப்படவில்லை. அதற்கான விளக்கம் சபாநாயகர் தரப்பில் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, சவுதி அரேபியாவில் தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் சட்டசபையில் அ.தி.மு.க. சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதனை தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் இதுதொடர்பாக அவையில் பேசினர். வெள்ளை நிற அரிசி இன்றைய நிகழ்வில், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, கூட்டுறவு ஆகிய துறைகள் மீதான மானிய கோரிக்கைகள் விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி அது தொடர்பான விவாதத்தில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் வெங்கடரமணன் பேசினார். இதனை அடுத்து, தி.மு.க. எம்.எல்.ஏ. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசும்போது, எங்களுடைய 5 ஆண்டுகளில் நெல் மூட்டைகள் நனையாமல் பாதுகாப்பாக குடோன்களில் வைத்தோம். நெல்லை பாதுகாத்தோம். நெல்லை நனையாமல், முளைக்க விடாமல், வெள்ளை நிறத்தில் அரிசி கிடைக்க வழி செய்தோம் என்றார். கருப்பான அரிசி தி.மு.க. எம்.எல்.ஏ. கே.என். நேரு பேசும்போது, 30 வருடங்களுக்கு முன்பு நானும் இந்த உணவு துறையை பார்த்துள்ளேன். அப்போது அரிசி கிடைப்பது கஷ்டம். கருப்பான அரிசியே கிடைக்கும் என்றார். அமைச்சராக சக்கரபாணி இருந்தபோது, நெல்லை நனையாமல் கொண்டு சென்றவர் என்றார். அதனால் ரேஷன் அரிசி கால்நடைகளுக்கு அல்ல. எல்லா மக்களும் சாப்பிடுகின்றனர். இதனால், சர்க்கரை அளவு குறையும் என்பதே உண்மை என்றார். 1 லட்சம் மூட்டை தொடர்ந்து அவையில் உணவு துறை அமைச்சர் பேசும்போது, கே.என். நேரு உள்பட முன்னாள் அமைச்சர்கள் 2 பேர் பேசும்போது, தி.மு.க.வின் 5 ஆண்டு கால ஆட்சியில் நெல் நனையவில்லை என்றனர். ஆனால், எங்களிடம் ஓராண்டு கால அறிக்கை மற்றும் பத்திரிகைகளில் வெளியான செய்திகள் உள்ளன. அவை விவசாயிகள் கூறிய விசயம்தான். எடுத்துக்காட்டாக, 2025 டிசம்பரில் மதுராந்தகத்தில் 5 ஆயிரம் மூட்டைகள் மழையில் நனைந்தன. விருத்தாசலத்தில் 5 ஆயிரம் நெல் முட்டைகள் நனைந்துள்ளன. ஜனவரி 2025-ல் சிவகங்கையின் இளையான்குடி பகுதியில் நெல் கொள்முதல் தாமதத்திற்காக விவசாயிகள் தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். 2026 பிப்ரவரியில், சேத்தியாதோப்பில் 1 லட்சம் மூட்டை, நெல் கொள்முதல் தேக்கமடைந்தது. மானாமதுரையில் பல ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்திருக்கின்றன. பத்திரிகைகளில் வெளிவந்த இதற்கான அறிக்கையை சேகரித்து வைத்திருக்கிறேன் என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/did-paddy-get-drenched-in-rain-in-5-years-of-rule-or-not-dmk-tvk-debate




