தேனி, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே மேகமலை அருவி உள்ளது. இந்த அருவியில் குளிப்பதற்காக தேனி மட்டுமின்றி மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்பட வெளிமாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். வனத்துறை தடை இந்த நிலையில், தேனி மாவட்டம் மேகமலை அருவிப் பகுதியில் சீரமைப்புப் பணிகளுக்காக இன்று முதல் சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. பணிகள் முடியும் வரை தடை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வனத்துறையின் தடையால் அருவிக்கு குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/forest-department-bans-tourists-from-visiting-meghamalai-falls




