சென்னை, சட்டமன்றத்தில் மத பிரச்சாரங்கள் நடந்தபொழுது “கோமா”வில் இருந்தீர்களா பெ. சண்முகம்? என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து, நயினார் நாகேந்திரன் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;- ராமர் பாலம் ராவணனால் சிறைபிடிக்கப்பட்ட சீதாபிராட்டியை மீட்பதற்காக, பகவான் ஸ்ரீ ராமனின் வழிகாட்டுதலில் வானரப் படைகள் உருவாக்கியதாக கருதப்படும் “ராமர் பாலம்” அமைந்துள்ள தனுஷ்கோடியில், பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த “கோதண்டராமர்” கோவிலை கொண்ட தனுஷ்கோடியில், பகவான் ஸ்ரீ ராமரை முன்னிறுத்தி “ராம யாத்திரை நாட்டியாஞ்சலி” என்ற பெயரில் ஒரு கலை நிகழ்ச்சி நடத்துவதில் என்ன தவறு? நான் பிறப்பால் ஒரு கிறிஸ்தவன் இந்து கடவுள்களின் பெயரால் ஒரு கொண்டாட்டம் நடந்தால் மட்டும் “மதச்சார்பின்மை” என்று வரிந்து கட்டிக் கொண்டு வருகிறீர்களே, அனைவருக்கும் பொதுவான சட்டமன்றத்தில் உங்கள் கூட்டணிக் கட்சியான தவெக-வின் அமைச்சர் மரிய வில்சன், “நான் பிறப்பால் ஒரு கிறிஸ்தவன்” என்று பெருமை பீற்றியது மதவெறி இல்லையா? அதே அமைச்சர் ஜெபமாலையுடன் பட்ஜெட் தாக்கல் செய்ய வந்தது மதக் குறியீடு இல்லையா? அதுமட்டுமன்றி, எனது பைபிள் கற்று கொடுத்ததை, எத்தனை தமிழ் படித்தாலும் புரியாது என்று கூறி அமைச்சர் மரிய வில்சன், நம் தமிழ் மொழியை இழிவுபடுத்தியது, வெளிப்படையான மத அரசியல் இல்லையா? மத பெருமை இல்லையா? சட்டமன்றத்தில் நடுநிலை வகிக்க வேண்டிய சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், விவிலியத்தை மேற்கோள் காட்டி பேசியது மதப் பெருமை இல்லையா? இவை குறித்து நீங்கள் வாய் திறக்காதது ஏன்? “மதச்சார்பின்மை” என்ற வார்த்தை இந்துக்களுக்கு மட்டும் தான் பொருந்துமா? மற்ற மதத்தினருக்கு தமிழகத்தின் பன்முகத்தன்மையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இல்லையா? பாடமா தோழரே? இப்படி குறிப்பிட்ட ஒரு மதத்தினர் மீது மட்டும் காழ்ப்புணர்ச்சி கொண்டு வன்ம அரசியல் செய்வது தான், “கம்யூனிசம்” உங்களுக்கு கற்றுக் கொடுத்த பாடமா தோழரே? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் மத பிரச்சாரங்கள் நடந்த பொழுது “கோமா”வில் இருந்தீர்களா தோழர் திரு. அவர்களே? இராவணனால் சிறைபிடிக்கப்பட்ட சீதாபிராட்டியை மீட்பதற்காக, பகவான் ஸ்ரீ ராமனின் வழிகாட்டுதலில் வானரப் படைகள் உருவாக்கியதாக கருதப்படும் “ராமர் பாலம்” அமைந்துள்ள தனுஷ்கோடியில், பல… — Nainar Nagenthran (@NainarBJP) September 30, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/were-you-in-coma-during-religious-campaigns-in-assembly-pe-shanmugam




