இன்றைக்கு நவீன மெட்ரோ நகரமாகத் திகழும் சென்னை பழங்காலத்தில் ஆன்மிக பூமி. ஆழ்வார்களும் ஆசார்யர்களும் நாயன்மார்களும் தம் திருவடிபட நடந்த நகரம். ஏன் இதிகாச காலத்திலேயே இந்தப் பகுதி மிகுந்த சிறப்புகளோடு திகழ்ந்தது என்கிறார்கள். ராமாயண காலத்தில் ஸ்ரீ ராமர் தன் குமாரர்களான லவனையும் குசனையும் தேடி இந்தப் பகுதிக்கு வந்தார். தொடர் பயணத்தினால் களைப்புற்ற அவர் கூவம் நதிக்கரையில் கொஞ்சம் ஓய்வெடுக்க அமர்ந்தார். ரகுகுல நாயகன் ஸ்ரீராமன் அமர்ந்த கரை என்பதால் அந்தப் பகுதிக்கே அந்தப் பெயர் உண்டானது. பிற்காலத்தில் மெல்ல மெல்ல மருவி அந்தப் பெயர் அமைந்தகரை ஆனது என்பார்கள். பெருந்தேவித் தாயார் அப்படிப்பட்ட அமைந்த கரையில் அமைந்திருக்கிறது பிரசன்ன வரதராஜ பெருமாள் திருக்கோயில். சுமார் 300 ஆண்டுகள் பழைமையான இந்தத் திருக்கோயிலின் மகிமைகள் ஏராளம். காஞ்சி வரதராஜ பெருமாளுக்கு இணையான பெருமாளாக இவர் எழுந்தருளியிருக்கிறார். பெருமாள் வரதராஜன் என்பதால் தாயாரும் பெருந்தேவி என்னும் திருநாமத்தோடு எழுந்தருளியிருக்கிறார். இத்தலப் பெருமாள் கருணாமூர்த்தி. வேண்டும் வரம் வழங்கும் வள்ளல் என்கிறார்கள். தீரா பிரச்னைகள்கூட இந்தப் பெருமாளிடம் வேண்டிக்கொண்டு வழிபட்டால் உடனே தீரும் என்கிறார்கள். தாயாரோ தயாபரி. இந்தத் தேவியை வழிபட்டால் செல்வ வளம் சேரும். வெள்ளிக்கிழமைகளில் சுக்ரஹோரையில் இந்தத் தாயாருக்கு விளக்கேற்றி வழிபாடு செய்தால் நிச்சயம் கடன் பிரச்னைகள் விலகும் என்கிறார்கள். முன்பதிவுக்கு: 044-66802980/07 முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்! திருவண்ணாமலை மாவட்டம் இஞ்சிமேடு ஸ்ரீவரதராஜபெருமாள்: திருமண வரம் தரும் மஞ்சள்மாலை பிரார்த்தனை! இந்த ஆலயத்தில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர், திருப்பதி ஸ்ரீநிவாசர், காஞ்சிபுரம் வரதராஜர், அயோத்தி ஸ்ரீராமர், மதுரா கிருஷ்ணர் ஆகியோர் சந்நிதிகொண்டு அருள்கின்றனர். இங்கே இருக்கும் ஸ்ரீ ஆண்டாள் சந்நிதி மகத்துவம் வாய்ந்தது. அன்னை ஆண்டாளை வழிபட்டால் கல்வி கேள்விகளில் மேன்மை ஏற்படும் என்கிறார்கள். படிக்கும் பிள்ளைகள் பூர நட்சத்திர நாளில் இங்கு வந்து ஆண்டாளை வழிபட்டால் கல்வியில் உள்ள தடைகள் விலகி நல்ல தேர்ச்சி கிட்டும் என்கிறார்கள். இங்குள்ள ஆஞ்சநேயர் மிகவும் சக்தி வாய்ந்தவராகத் திகழ்கிறார். சனி தோஷம், ஏழரை சனி ஆகியவற்றால் பாதிக்கப்படும் பக்தர்கள் சனி மற்றும் வியாழக்கிழமைகளில் இந்த ஆஞ்சநேயரை வழிபட்டால் சகலவிதமான துன்பங்களும் விலகி நற்பலன்கள் கூடிவரும் என்கிறார்கள். ஸ்ரீ வரதராஜப் பெருமாள் வரதராஜ பெருமாளுக்குப் பிரதி புதன் காலை மாலை ஸ்ரீ வரதராஜப் பெருமாள் விஷ்ணு சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டால் திருமணமாகாதவர்களுக்குத் திருமணம் கூடிவரும் என்கிறார்கள். மேலும் குடும்ப கஷ்டங்கள் தீர்வதோடு தொழில் அபிவிருத்தி, புத்ரபாக்கியம் ஆகியனவும் கிடைக்கும் என்கிறார்கள். இப்படிப்பட்ட வரங்கள் அருளும் இந்த வரதராஜப்பெருமாள் திருக்கோயிலில் சக்திவிகடனும் வரதராஜ பெருமாள் திருக்கோயில் நிர்வாகமும் இணைந்து விளக்கு பூஜை இருக்கிறோம். திருவிளக்கை தீபலட்சுமி என்றுதான் போற்றுவோம். அன்னையை தீபத்தில் ஆவாஹனம் செய்து பூஜை செய்தால் லட்சுமி தேவி மகிழ்ந்து வேண்டும் வரம் அருள்வாள். எனவேதான் வரும் ஜூலை 24 ம் தேதி ஆடி மாதம் வெள்ளிக்கிழமையுடன் கூடிய நன்னாளில் மாலை 6 மணிக்கு விளக்குபூஜை நடைபெற இருக்கிறது. முன்பதிவுக்கு: 044-66802980/07 முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்! திருவாரூர் மாவட்டம், பூந்தோட்டம் ஸ்ரீ அகத்தீஸ்வரர்: கும்பராசிக்காரர்களுக்கு வளம் தரும் திருத்தலம்! இந்த விளக்குபூஜையில் கலந்துகொண்டு பூஜை செய்ய சுபங்கள் கூடிவரும். திருமணப் பிரார்த்தனைகள் நிறைவேறும். பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைக்கும். மேலும் வீடு மனை வாங்கும் பாக்கியமும் உண்டாகும். இப்படி சகல வரங்களையும் தரும் விளக்கு பூஜையை ஜீ.ஆர்.டி ஜுவல்லர்ஸ், சக்தி மசாலா மற்றும் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் ஆகியோர் இணைந்து வழங்குகிறார்கள். இந்த வைபவத்தில் நீங்களும் பங்கேற்கலாம். அதற்கு கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள். இணைப்பில் பதிவு செய்தாலே போதுமானது. உறுதிப்படுத்த வேறெந்த பதிலும் அனுப்பப்பட மாட்டாது. நேரடியாக ஆலயத்துக்கு வந்துவிடலாம். கலந்துகொள்ளும் வாசகியர் கவனத்துக்கு: விளக்குப் பூஜையில் கலந்துகொள்ளும் வாசகியர், விளக்கு, விளக்கை வைப்பதற்கான தட்டு, மணி, பஞ்சபாத்திரம், உத்தரணி, கற்பூர ஆரத்தித் தட்டு ஆகியவற்றை எடுத்து வந்தால் போதுமானது. மற்றபடி பூஜைக்குத் தேவையான திரி, எண்ணெய், தாம்பூலப் பொருள்கள், நைவேத்தியம் முதலானவற்றை நாங்களே வழங்குகிறோம். அற்புதமான இந்த விளக்குப் பூஜையில் கலந்துகொள்ள விரும்பும் வாசகியர் இங்கு தரப்பட்டுள்ள link-ஐ பயன்படுத்தி உரிய விவரங்களைப் பூர்த்தி செய்து முன்பதிவு செய்யலாம் அல்லது கீழ்க்காணும் எண்ணில் தொடர்பு கொண்டு, உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் விவரங்களுடன் முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த விளக்குப் பூஜையில் கலந்துகொள்ள எவ்வித கட்டணமும் கிடையாது. முன்பதிவுக்கு: 044-66802980/07 முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்! தஞ்சை மாவட்டம், சேங்கனூர் சத்தியகிரீஸ்வரர் கோயில்: பதவி யோகம் கிடைக்கும். குரு தோஷம் நீங்கும்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/spiritual/temples/vilakku-poojai-at-aminjikarai-varadaraja-perumal-temple




