தென்காசி, தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் களை கட்டியுள்ளது. குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக விழுந்து வருகிறது. நேற்று குற்றாலம் மற்றும் அதனை ஒட்டியுள்ள மலைப்பகுதிகளில் சாரல் மழை பெய்ததால் குற்றாலம் மெயின் அருவி, சிற்றருவி, ஐந்தருவிக்கு தண்ணீர் வரத்து சற்று அதிகரித்து காணப்பட்டது. இன்று சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் குற்றாலத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. காலை முதலே குற்றால அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். ஐந்தருவி, மெயின் அருவி கார் பார்க்கிங் பகுதிகள் முழுவதும் நிரம்பி வழிந்ததால் போலீசார் அதனை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். குற்றாலம் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசி வருவதோடு இதமான சூழ்நிலை நீடிப்பதால் குற்றால சீசனை சுற்றுலா பயணிகள் உற்சாகமாக அனுபவித்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/weekend-holiday-tourists-flock-to-courtallam-enjoying-a-bath-in-the-waterfalls




