சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.5.8 கோடி தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக பிடிபட்ட வடமாநில வாலிபரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்னறர். வடமாநில வாலிபர் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு சிங்கப்பூரில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை, விமான நிலைய சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது வடமாநிலத்தை சேர்ந்த 30 வயது வாலிபர் ஒருவர், சுற்றுலா விசாவில் சிங்கப்பூர் சென்றுவிட்டு சென்னை திரும்பி வந்திருந்தார். அவர் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அவரை நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். ரூ.5.8 கோடி தங்கம் பறிமுதல் இதையடுத்து அவரது உடைமைகளை முழுமையாக சோதனை செய்தனர். அவர் கொண்டு வந்த சூட்கேசின் மேல் பகுதியில் ரகசிய அறை அமைக்கப்பட்டு இருந்ததை கண்டு பிடித்தனர். அந்த ரகசிய அறையை பிரித்து பார்த்தபோது, அதில் தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அவற்றை வெளியே எடுத்து எடை போட்டபோது, 3 கிலோ 960 கிராம் இருப்பது தெரியவந்தது. இதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.5 கோடியே 80 லட்சம் ஆகும். அந்த தங்க கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை மேலும், இந்த தங்கத்தை கடத்திவர அவரை சிங்கப்பூர் அனுப்பிய நபர் யார்? இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பது குறித்து பிடிபட்ட வாலிபரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/rs58-crore-gold-seized-at-chennai-airport




