சென்னை, இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கம். 2011-ம் ஆண்டுக்குப் பிறகு 2021-ம் ஆண்டு நடத்த வேண்டிய கணக்கெடுப்பு கொரோனா தொற்றுகாரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்தநிலையில் தற்போது 2025-2026-ம் ஆண்டுகாலகட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியுள்ளன. இந்திய வரலாற்றில், 2025-2026-ம் ஆண்டு கணக்கெடுப்பு முழுமையாக டிஜிட்ல் முறையில் நடக்கிறது. மக்கள் தங்களை பற்றிய தகவல்களை "செல்போன் செயலி மூலம்" தாங்களாகவே பதிவு செய்யும் வசதியும் இருக்கிறது. இந்த நிலையில், ஆகஸ்ட் 1 - 30 வரை மக்கள் கணக்கெடுப்பிற்காக அலுவலவர்கள் வீடு தேடி வருவார்கள் என மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரி சுந்தரேஷ் பாபு தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கூறி இருப்பதாவது; ”ஆகஸ்ட் 1 - 30 வரை மக்கள் கணக்கெடுப்பிற்காக அலுவலவர்கள் வீடு தேடி வருவார்கள். 33 கேள்விகள் கேட்கப்படும். நாளை முதல் ஜூலை 31 வரை என்ற இணையதளத்திலும் பொதுமக்கள் தாங்களாகவே தங்கள் விவரங்களை பதிவு செய்யலாம். இணையதளத்தில் பதிவது கட்டாயமல்ல. ஆன்லைனில் பதிவு செய்தால் அலுவலர்கள் நேரில் வரும்போது அதனை சரிபார்ப்பார்கள். இல்லையென்றால் அவர்களாகவே விவரங்களை கேட்டுப் பெறுவார்கள்.” இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/census-in-tamil-nadu-from-august-1-to-30




