புதுடெல்லி இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டெல்லியில் இன்று நடக்கிறது. 20 ஓவர் கிரிக்கெட் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி விளையாடுகிறது. இந்த 3 போட்டிகளும் டெல்லியிலேயே நடக்கின்றன. இதன்படி இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. 2-வது போட்டி 15-ந்தேதியும், 3-வது போட்டி 17-ந்தேதியும் நடக்கின்றன. ஸ்ரேயாஸ் அய்யர் ஸ்ரேயாஸ் அய்யர் 20 ஓவர் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்ற பிறகு இந்திய அணி உள்ளூரில் விளையாடும் முதல் தொடர் இதுவாகும். உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு ஸ்ரேயாஸ் அய்யர் கேப்டனானதும் அயர்லாந்து (0-2) இங்கிலாந்து (0-4) தொடர்களில் தோல்வியை சந்தித்த இந்திய அணி கடைசியாக நடந்த ஜிம்பாப்வே தொடரை (3-0) முழுமையாக கைப்பற்றி வெற்றிப்பாதைக்கு திரும்பியது. ஆசிய விளையாட்டு போட்டிக்கு ஆயத்தமாவதற்கு இந்த தொடரை சரியாக பயன்படுத்தி கொள்ள இரு அணிகளும் ஆர்வம் காட்டும். ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இதுவரை தோல்வியை சந்திக்காத இந்தியா கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். அத்துடன் உள்ளூர் சூழல் அனுகூலமாக இருக்கும். 18 முறை ஆப்கானிஸ்தான் அணியை பொறுத்தமட்டில், சர்வதேச கிரிக்கெட்டில் 18 முறை இந்தியாவுடன் மோதி இருக்கிறது. அதில் ஒன்றில் கூட வெற்றி பெற்றது கிடையாது. இதுவரை இந்தியாவுக்கு எதிராக 2 டெஸ்டில் ஆடி இரண்டிலும் தோற்றுள்ளது. 7 ஒரு நாள் போட்டியில் விளையாடி 6-ல் தோற்று இருக்கிறது. ஒரு ஆட்டம் டை (சமன்) ஆனது. 9 இருபது ஓவர் போட்டியில் ஆடி 8-ல் தோல்வி கண்டுள்ளது. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது. இந்த மோசமான சாதனையை மாற்றி முதல் வெற்றியை பெற அந்த அணியினர் தீவிரம் காட்டுவார்கள். போட்டி தொடரை வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் வரிந்து கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதனை சோனி ஸ்போர்ட்ஸ் டென் 5, சோனி மேக்ஸ் ஆகிய சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன. போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:- இந்தியா: அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன் அல்லது வைபவ் சூர்யவன்ஷி, இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), திலக் வர்மா, அக்ஷர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி. ஆப்கானிஸ்தான்: ரமனுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஜட்ரன் (கேப்டன்), குல்படின் நைப், செடியுல்லா அடல், டார்விஷ் ரசூலி, அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், முகமது நபி, ரஷித் கான், முஜுப் உர் ரஹ்மான், நூர் அகமது, பசல்ஹக் பரூக்கி அல்லது நவீன் உல்-ஹக். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/cricket/india-afghanistan-clash-today-in-first-t20-cricket




