புதுடெல்லி, 2027-28 சந்தைப்படுத்துதல் பருவத்தில் ரபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல். இது தொடர்பாக, மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- அதிகரிக்க ஒப்புதல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு 2027-28 சந்தைப்படுத்துதல் பருவத்தில் ரபி பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிக்க ஒப்புதல் அளித்துள்ளது. ரபி பயிர்கள் விவசாயிகள், தங்களது விளைப் பொருட்களுக்கு உரிய விலையை உறுதி செய்யும் வகையில், 2027-28 சந்தைப்படுத்துதல் பருவத்தில் ரபி பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. ஆதரவு விலை விவரங்கள் அதிகபட்சமாக குங்குமப்பூ பயிர், குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.675 என அறிவிக்கப்பட்டுள்ளது. ரேப்சீட், கடுகு பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.413 என அறிவிக்கப்பட்டுள்ளது. மசூர் பருப்பு, பார்லி, கொண்டைக்கடலை, கோதுமை ஆகியவற்றுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை, முறையே, குவிண்டால் ஒன்றுக்கு ரூ.390, ரூ.136, ரூ.83, ரூ.25 என்ற அளவில் உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2027-28 சந்தைப்படுத்துதல் பருவத்திற்கான குறிப்பிட்ட ரபி பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு, அகில இந்திய சராசரி உற்பத்தி செலவைக் காட்டிலும் ஒன்றரை மடங்கு கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஊக்குவித்து வருகிறது கடந்த 2018-19-ம் நிதியாண்டின் மத்திய பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட அறிவிப்புக்கு ஏற்ப இந்த விலை உயர்வு அமைந்துள்ளது. அண்மை ஆண்டுகளில் தானியங்கள் அல்லாத பயிர் வகைகளான பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகளுக்கு அதிகளவில் குறைந்தபட்ச ஆதரவு விலையை வழங்குவதன் மூலம் அவற்றின் சாகுபடியை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/increase-minimum-support-price-rabi-crops-union-cabinet-approval




