கன்னட திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ரச்சிதா ராம். ரஜினி நடிப்பில் வெளியான 'கூலி' படத்தின் மூலம் 'கல்யாணி' கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். சமீபத்தில் இவரது 34-வது பிறந்தநாளை முன்னிட்டு பெங்களூரில் உள்ள அவரது வீட்டின் அருகே ரசிகர்கள் பிரமாண்ட கட்அவுட்டுகள் அமைத்தும், பட்டாசுகள் வெடித்தும் உற்சாகமாகக் கொண்டாடினர். மேலும், ரசிகர் மன்றத்தினர் ஏற்பாடு செய்திருந்த சிறப்புச் சந்திப்பிலும் நடிகை ரச்சிதா ராம் கலந்துகொண்டார். நடிகை ரச்சிதா ராம் அப்போது கேக் வெட்டி ரசிகர்களுடன் உரையாடிய அவர், அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். அப்போது கூட்டத்திலிருந்த ரசிகர் ஒருவர் எதிர்பாராதவிதமாக ரச்சிதா ராமின் கன்னத்தைக் கிள்ளினார். இதனால் ஒரு கணம் பதற்றமடைந்த நடிகை, உடனடியாகச் சமாளித்துப் புன்னகையை வெளிப்படுத்தினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து வந்த பெண் ரசிகர்கள் பலரும் நடிகையிடம் அனுமதி பெற்று அவரது கன்னத்தைத் தொட்டுப் பார்த்து மகிழ்ந்தனர். இதற்கிடையே மற்றொரு இடத்தில் புகைப்படம் எடுக்க வந்த ஆண் ரசிகர் ஒருவரிடம் "என்னைத் தொட வேண்டாம்" என்று கண்டிப்புடன் கூறினார். இருப்பினும், புகைப்படம் எடுத்து முடித்ததும் அந்த ரசிகர் திடீரென அவரது கன்னத்தைக் கிள்ளினார். அதற்கு நடிகை ரக்ஷிதா அளித்த கியூட்டான எதிர்வினையும் தற்போது இணையத்தில் பரவி வருகிறது. இது தொடர்பாக கலவையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. நடிகை ரச்சிதா ராம் இது குறித்து பேசிய நடிகை ரச்சிதா ராம், ``என் ரசிகர்கள் என் மீது வைத்திருந்த அன்பை தவறான நோக்கத்தில் வெளிப்படுத்தவில்லை. இதைப் பார்த்த என் நண்பர்கள், 'உனக்கு கோபம் வரவில்லையா?' என்று கேட்டனர். ஒருவர் குழந்தையைக் கொஞ்சி, அன்புடன் அரவணைப்பது போன்றுதான் என் ரசிகரும் அன்பை வெளிப்படுத்தினார். அதில் எந்தவிதமான தவறான நோக்கமும் இல்லை. ஒருவேளை அது தவறான தொடுதலாக இருந்திருந்தால், நிச்சயமாக நான் கண்டித்திருப்பேன். ஆனால், ஒருவர் தூய்மையான அன்பை வெளிப்படுத்தும்போது அதை நான் எப்படி கண்டிக்க முடியும்? உண்மையில், அந்த அன்பை நான் மிகவும் ரசித்தேன்" என்றார். Janhvi Kapoor: ``பாலியல் அத்துமீறலுக்குச் சமமானது. சும்மா விடக் கூடாது" - நடிகர் விஜய் தேவரகொண்டா சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள. உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/trending/viral/actress-rachita-ram-is-hosting-a-fan-meet-up-to-celebrate-her-birthday


