தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரத்தில் கார் மீது ஆட்டோ மோதி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், மும்பையைச் சேர்ந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே பலியானார். மும்பைக்கு புறப்பட்ட மூதாட்டி மும்பை டோம்பிவ்லி பகுதியைச் சேர்ந்த முத்துராஜன் மனைவி ராஜராஜேஸ்வரி (வயது 60). இவர் கடந்த 18-ம் தேதி மும்பையிலிருந்து புறப்பட்டு எட்டையபுரத்திலுள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். உறவினர்களைச் சந்தித்து நலம் விசாரித்துத் தங்கியிருந்த அவர், கடந்த 20-ம் தேதி மதியம் மீண்டும் மும்பைக்கு புறப்பட்டார். மூதாட்டி பலி இதற்காக எட்டையபுரத்திலிருந்து கோவில்பட்டி ரெயில் நிலையத்திற்கு செல்வதற்காக ஆட்டோவில் பயணித்துள்ளார். அந்த ஆட்டோவை எட்டையபுரம் அருகேயுள்ள சுரைக்காய்பட்டியைச் சேர்ந்த சுரேஷ்(37) என்பவர் ஓட்டியுள்ளார். ஆட்டோ எட்டையபுரம் பேரூராட்சி மன்றம் அருகே சென்று கொண்டிருந்தபோது, அந்த அலுவலகம் முன்பிருந்து ஒரு கார் திடீரென சாலையில் திரும்பியுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக கண் இமைக்கும் நேரத்தில் காரின் மீது ஆட்டோ மோதி, சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஆட்டோவில் பயணித்த ராஜராஜேஸ்வரி படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த எட்டையபுரம் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி, எட்டையபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து எட்டையபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரை ஓட்டி வந்த எட்டையபுரம் அருகேயுள்ள முதலிபட்டியைச் சேர்ந்த காளிராஜிடம்(36) தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உறவினர் வீட்டிலிருந்து ஊருக்கு திரும்பிய வழியில் விபத்தில் சிக்கி பெண் பலியான சம்பவம் எட்டையபுரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/auto-rickshaw-collides-with-car-in-thoothukudi-elderly-woman-from-mumbai-dies




