தமிழக வெற்றிக் கழக ஊத்தங்கரை எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் பேரம் பேசப்பட்ட வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கில் ரூ.3 கோடிக்கு மேல் பணம் பறிமுதல் செய்யப்பட் டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. டவுன் போலீசார் சோதனை ஆனால், அவர்கள் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து முன்ஜாமீன் பெற்றுக்கொண்ட னர். இதனிடையே இந்த வழக்கு தொடர்பாக கடந்த 18-ந் தேதி இரவு கரூ ரில் உள்ள கனகராஜ் என்பவருக்கு சொந்தமான நிதி நிறுவனத்தில் கரூர் டவுன் போலீசார் சோதனை நடத்தி அந்த நிறுவனத்திற்கு 'சீல்' வைத்திருந்தனர். அமலாக்கத்துறை முகாம் இந்த சோதனையில் குதிரை பேர வழக்கு தொடர்பாக சில ஆவணங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக அமலாக்கத் துறை அதிகாரிகள் 6 பேர் கரூர் சென்று முகாமிட்டுள்ளனர். த.வெ.க. எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசப்பட்ட வழக்கு தொடர்பாக கரூரில் உள்ள அலுவலகங்களில் விரைவில் சோதனை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/issue-regarding-attempted-bargaining-with-tvk-mla-enforcement-directorate-officials-camp-in-karur




