திருப்பூர், இந்தியா-பிரிட்டன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால், வங்கதேசத்துக்குச் செல்ல இருந்த ஆடை ஏற்றுமதி ஆர்டர்கள் இந்திய நிறுவனங்கள் பக்கம் திரும்பத் தொடங்கியுள்ளதாக ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக அனைத்து ஜவுளி ஏற்றுமதி முகமைகள் கூட்டமைப்பு தலைவர் இளங்கோவன் கூறியதாவது; இந்தியா-பிரிட்டன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கடந்த 15ம் தேதி அமலுக்கு வந்தது. இதன் வாயிலாக, நம் நாட்டு ஜவுளி, ஆடை ஏற்றுமதிக்கு பூஜ்ஜிய சுங்க வரி சலுகை கிடைத்துள்ளது. இதற்கு முன் வங்கதேசம், வியட் நாம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் மட்டுமே இந்தச் சலுகையை அனுபவித்து வந்தன. தற்போதைய சலுகையின் காரணமாக, வங்கதேசத்துக்கு ஆர்டர் வழங்கி வந்த பிரிட்டன் வர்த்தகர்களும், வர்த்தக முகமைகளும் இந்திய நிறுவனங்களை அணுகத் தொடங்கியுள்ளன. வங்கதேசத்துக்குச் செல்ல இருந்த 4 கோடி டி-ஷர்ட் உற்பத்தி ஆர்டரை இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு முயற்சியும் நடந்து வருகிறது. வழங்கும் இந்த புதிய வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்த, ஒவ்வொரு நிறுவனமும் உற்பத்தித் திறனையும் கட்டமைப்பையும் மேம்படுத்த வேண்டும். அப்போதுதான் சர்வதேச சந்தையில் கிடைக்கும் புதிய ஆர்டர்களை தக்கவைத்துக்கொள்ள முடியும். இவ்வாறு, அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/free-trade-agreement-garment-export-orders-from-britain-shift-to-india




