மும்பை, தென்மும்பை பகுதியில் உள்ள பங்களாவில் கடந்த 2013-ம் ஆண்டு வீட்டு வேலை செய்து வந்த மஞ்சுளா சுர்வே என்ற பெண் அங்கிருந்த நகை, பணத்தை கொள்ளை அடித்து விட்டு தப்பிச்சென்றார். இதுகுறித்து கொலாபா போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற பெண்ணை பிடிக்க விசாரணை நடத்தி வந்தனர். அவர் போலீசாரிடம் பிடிபடாமல் இருக்க வேறு பெயர்களை பயன்படுத்தியும், வெவ்வேறு இடங்களில் தங்கியும் வந்ததால் சிரமம் ஏற்பட்டு வந்தது. கடந்த 13 ஆண்டுகளாக நடத்திய தேடுதல் வேட்டையின் போது இறுதியாக ராய்காட் மாவட்டம் மான்காவ் தாலுகா நிஜாம்பூர் போத்வாடி கிராமத்தில் மஞ்சுளா சுர்வே வேறு பெயர் மூலம் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதன்பேரில் கொலாபா போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இதில், பர்தா அணிந்திருந்த மஞ்சுளா சுர்வேயின் ஆதார் கார்டை வாங்கி பார்த்து உறுதி செய்தனர். இதையடுத்து அப்பெண்ணை கைது செய்து விசாரணைக்காக மும்பை அழைத்து வர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/woman-who-stole-jewelry-and-cash-from-a-house-where-she-worked-arrested-by-police-after-13-years




