தவெக அரசின் அமைச்சரவையில் பாமக இணையப்போவதாகவும், சௌமியா அன்புமணிக்கு முக்கியமான துறை ஒதுக்கப்படவிருப்பதாகவும் தகவல் வெளியானது. குறிப்பாக, மதுராந்தகத்தில் கணிசமான அளவில் வன்னிய சமுதாய மக்கள் இருக்கின்றனர். இவர்களின் வாக்கு வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கக் கூடியதாக இருக்கும். அதனால் திரைமறைவில் 'தவெகவுக்கு நட்பு சக்தியாகவே இருங்கள். சரியான சமயத்தில் உங்களுக்கான உரிய கௌரவத்தை முதல்வர் செய்வார்' எனத் தவெக தரப்பில் பாமகவுக்கு உறுதி கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அதன் பின்னரே இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை எனும் முடிவை பாமக எடுத்தது என்றும் கூறப்பட்டது. விஜய், சௌமியா அன்புமணி இந்த நிலையில், செஞ்சியில் எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி, பா.ம.க-வின் பூரண மதுவிலக்கு பேரணியில் 'கள்' இடம்பெறுமா? எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார். பா.ம.க-வின் கொள்கை என்னவோ, அதைத்தான் நாங்கள் எப்போதும் வலியுறுத்துகிறோம். கள் தொடர்பான நிலைப்பாட்டை பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கொள்கை விளக்கத்தில் தெளிவாகக் கூறியிருப்பார். அதுவே எங்கள் நிலைப்பாடு. தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் ஆட்சி மாற்றத்திற்கு 'எஸ்.ஐ.ஆர்' காரணம் என்றும், தலைமைத் தேர்தல் அதிகாரி தனிச்சச்சையாகச் செயல்பட்டார் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. ஆனால், இதைப் பற்றி முழுமையான விவரங்கள் தெரிந்த பிறகே கருத்துக் கூற முடியும். அந்தப் புகார்களில் உண்மை இருக்கிறதா அல்லது ஏதேனும் முறைகேடுகள் நடந்துள்ளனவா என்பது முழுமையாக ஆராயப்பட வேண்டும். இடைத்தேர்தல் முடிந்த பிறகு நான் அமைச்சராகப்போவதாக அரசியல் வட்டாரத்தில் பரவி வரும் தகவல் வெறும் வதந்தி. இதுபோன்ற வீண் வதந்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்" என்றார். 'தவெக அமைச்சரவையில் இணையும் சௌமியா அன்புமணி?' - விஜய்யின் 'மதுராந்தகம்' பிளான்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/government-and-politics/mla-sowmya-anbumani-responded-to-reports-suggesting-she-might-become-minister




