தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. நேற்று முதல்வர் விஜய் தாராபுரத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது வாய் தவறி, பா.ஜ.க-வின் ஒரு பிரிவுதான் தவெக எனப் பேசினார். அது சமூக ஊடகங்களில் பேசுபொருளானது. இந்த நிலையில், இன்று கோவையில் பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``முதலமைச்சர் விஜய் தடுமாற்றத்தில் எதையோ பேசப் போய் எதையோ பேசி முடித்துள்ளார். எதை எப்படிச் சொல்ல வேண்டும் என்று தெரியாமல் அவர் தடுமாறியதே, இந்தத் தேர்தலில் அவருக்குப் ஏற்படப்போகும் பெரிய மாற்றமாக அமையப் போகிறது. தான் செய்த சாதனைகள் என்று அவர் பெரிய பட்டியலிட்டுக் காட்டுகிறார். விஜய் ஆனால், தவெக அரசின் சாதனைகளை நான் சொல்லட்டுமா? ஆட்சிக்கு வந்தவுடன் தேர்தல் வாக்குறுதி தொடர்பான எந்தக் கோப்பில் அவர் கையெழுத்திட்டார்? நாளொன்றுக்கு 5 மணி நேர மின்வெட்டு, ஆவின் பால் கொள்முதலைக் குறைத்துவிட்டு விலை உயர்த்தியது, யாருக்கும் தெரியாமல் பேருந்துக் கட்டணம் மற்றும் சொத்து வரியை உயர்த்தியது ஆகியவைதான் இந்த அரசின் சாதனைகளாக உள்ளன. இதே நிலை நீடித்தால் இன்னும் நான்கு மாதங்களில் குழந்தைகளுக்குக் கூடப் பால் கிடைக்காத சூழல் உருவாகும். ஆபத்தான சூழலில் 170 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி ஸ்மித் மச்சார்-க்கு பாராட்டுகள். 9-ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் செங்கோல் பற்றிய வரலாறு சேர்க்கப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது. சனாதன தர்மத்தையும் இந்து மதத்தையும் எதிர்த்துப் பேசி வந்த திமுக, தற்போது வழிபாட்டு உணர்வை வெளிப்படுத்தும் வகையில் 'ஓம் காளி ஜெயகாளி' போன்ற முழக்கங்களை எழுப்புகிறது. நயினார் நாகேந்திரன் இன்று ஆட்சியைத் தக்கவைக்க மாறியிருக்கிறார்கள். எதிர்காலச் சந்ததியின் நலன் கருதி, யார் தீய சக்தி, யார் நல்ல சக்தி என்பதை மக்களே தீர்மானிப்பார்கள். அதேவேளையில், தவெக கூட்டணிக்கு ஆதரவாக உள்ள சிபிஎம் சண்முகமே இத்தேர்தலில் பண பலம் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இந்த குற்றச்சாட்டிற்குப் புதிதாக வந்திருக்கும் விஜய் என்ன பதில் சொல்லப் போகிறார் என்பது தெரியவில்லை." என்றார். "சனி, ஞாயிறு விடுமுறை எடுக்கும் ஒரே முதல்வர், ஸ்வீட் ப்ரோ விஜய் தான்!"- திமுக எம்.பி கனிமொழி Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group. இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும். வணக்கம், BIG BREAKINGS முதல். அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/government-and-politics/nainar-nagendran-severely-criticized-the-functioning-of-the-tvk-government




