சென்னை, நடிகை சவுகார் ஜானகிக்கு நேற்று இரவு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் சவுகார் ஜானகி தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் வசித்து வரும் சௌகார் ஜானகியின் வயது 94. இவருக்கு நேற்று இரவு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். 400-க்கும் மேற்பட்ட படங்கள் நடித்த ஜானகி 1931-ம் ஆண்டு பிறந்த சவுகார் ஜானகி, 1950-களில் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர். சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர்., ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவர், கலைத்துறையில் ஆற்றிய பங்களிப்புக்காக 2022-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் பெற்றுள்ளார். ஆந்திர மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர் இவர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/veteran-actress-sowcar-janaki-admitted-to-hospital




