டாம் குரூஸ் நடிப்பில் உருவான ‘டிக்கர்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ். ஹாலிவுட் சினிமாவில் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள இவர் ஸ்டண்ட் காட்சிகளை மிகவும் சாதாரணமாக செய்து முடிப்பவர். இவரது நடிப்பில் வெளியான மிஷன் இம்பாசிபிள் வரிசை படங்களுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். 63 வயதிலும் தான் நடிக்கும் படங்களுக்கு டூப் போடுவதில்லை. எவ்வளவு ஆபத்தான காட்சியானாலும் அசாதாரணமாக நடித்து அனைவரது பாராட்டையும் பெறுவது இவரது வழக்கம். டாம் குரூஸுக்கு கவுரவ ஆஸ்கர் விருது கடந்த ஜனவரியில் வழங்கப்பட்டது. சீக்ரட் ஏஜண்டாக டாம் குரூஸ் நடித்து 1996ம் ஆண்டு முதன் முதலில் மிஷன் இம்பாஸிபிள் படம் வெளியானது. முதல்பாகம் பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்ததாக 8-பாகங்கள் வெளியானது. இவை அனைத்துமே நல்ல வரவேற்பை பெற்றன. டாம் க்ரூஸின் அதிரடியான ஆக்ஷன் காட்சிகளுக்காகவே பிரபலமான அவரது ‘மிஷன் இம்பாஸிபிள்’ திரைப்பட வரிசையில் 8-வது பாகமான, ‘மிஷன் இம்பாஸிபிள்- தி பைனல் ரெக்கனி’ வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. ஆஸ்கர் வென்ற சிறந்த இயக்குநரான அலெஜான்ட்ரோ இனாரித்து இயக்கத்தில் நடிகர் டாம் குரூஸ் நடித்து முடித்த திரைப்படம் ‘டிக்கர்’. இதில், வயதான முதலீட்டாளர் தோற்றத்தில் டாம் குரூஸ் நடித்துள்ளார். ஆக்சன் கதைகளுக்குப் பெயர் போன டாம் குரூஸ் 13 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படம் மூலம் ஆக்சன் அல்லாத ஓர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், ‘டிக்கர்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை உலகம் முழுவதும் வார்னர் புரோஸ் நிறுவனம் வெளியிடுகிறது. Digg. Or Die. DIGGER. Only in theaters October 2. — Tom Cruise (@TomCruise) July 13, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/tom-cruises-digger-film-trailer-out




