மதுரை, மீனாட்சி கோவில் கும்பாபிஷேகம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் வருகிற 17-ந்தேதி விமரிசையாக நடக்கிறது. கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்க பூஜைகள் 11-ந்தேதி தொடங்கின. அதன்படி முதல் கால யாகசாலை பூஜைகள் கோவில் வடக்காடி வீதியில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் தொடங்கி நடந்து வருகிறது. அங்கு ஹோமம் வளர்க்கப்பட்டு 400 சிவாச்சாரியார்களால் வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்று வருகின்றன. 5 டன் மலர்கள் இதற்கிடையே கும்பாபிஷேக விழாவுக்காக கோவில் கோபுரங்கள், பிரகாரங்கள், மூலவர் சன்னதிகள், கொடிமரங்கள் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட உள்ளன. அதற்காக வெளிநாடு, வெளி மாநிலங்கள், உள்ளூரில் இருந்து தற்போது 5 டன் மலர்கள் கோவிலுக்கு வந்தன. அதில் சம்பங்கி, சிவப்பு, வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிற அரளிப்பூக்கள், இருவாச்சி பூக்கள், மஞ்சள், வெள்ளை, ஆரஞ்சு நிற சாமந்தி பூக்கள், பல வண்ணங்களில் உள்ள ஆந்தூரியம் என பல வண்ண மலர்கள் வந்துள்ளன. மாலை கட்டும் பணி இவை நீண்ட நாள், நீண்ட நேரம் வாடாமல் நறுமணம் வீசக் கூடியது என கூறப்படுகிறது. இந்த பூக்கள் தற்போது புதுமண்டபத்தில் இறக்கி வைத்து அதனை மாலையாகக் கட்டும் பணியில் 50 பேர் ஈடுபட்டு வருகிறார்கள். முதல் கட்டமாக 4 ராஜ கோபுரங்களுக்கு சுமார் 175 அடி உயரத்தில் மாலைகள் கட்டும் பணி தொடங்கி உள்ளதாகவும், இறுதி கட்டத்தில் மூலவர் மற்றும் கொடிமரம் பகுதியில் பூக்களால் அலங்காரம் செய்யும் வேலைகள் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. இவ்வாறு மீனாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக பணி கள் மும்முரமாக நடந்து வருகின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/consecration-ceremony-the-day-after-tomorrow-5-tonnes-of-flowers-arrive-at-madurai-meenakshi-amman-temple




