பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் வீட்டில் அனுமதி இல்லாமல் சலூன் திறப்பதற்காக வீட்டில் கட்டுமானப்பணிகளை மேற்கொள்ள மும்பை மாநகராட்சி தடை விதித்து இருக்கிறது. இந்தி திரையுலகில் காதலர்களாக இருந்து பின்னர், திருமண பந்தத்தில் இணைந்த பல ஜோடிகள் உள்ளன. அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் நடிகை கஜோல். தமிழில் ‘மின்சார கனவு’ படத்தில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றவர் கஜோல். பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் மும்பை ஜுகுவில் உள்ள கபோல் ஹவுசிங் சொசைட்டி பங்களாவில் வசித்து வருகிறார். இது 7802 சதுர அடி கொண்டது ஆகும். எனவே தனது பங்களாவின் ஒரு குறிப்பிட்ட பகுதியை வாடகைக்கு விட அஜய் தேவ்கன் முடிவு செய்துள்ளார். அந்த இடத்தில் சலூன் மற்றும் ஸ்பா தொடங்க முடிவு செய்யப்பட்டு அதற்கான கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. ஆனால் குடியிருப்பு பகுதியில் வர்த்தக பணிகளை மேற்கொள்ள அப்பகுதி குடியிருப்புவாசிகளும், ஹவுசிங் சொசைட்டி உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். அனுமதி இல்லாமல் கட்டுமானப்பணிகள் நடைபெறுவதாக கூறி ஹவுசிங் சொசைட்டி நிர்வாகம் மும்பை மாநகராட்சியில் புகார் செய்துள்ளது. இதையடுத்து கபோல் ஹவுசிங் சொசைட்டி வளாகத்தில் அமைந்துள்ள நடிகர் அஜய் தேவ்கனின் பங்களாவில், சலூன் மற்றும் ஸ்பா ஒன்றை அமைப்பதற்கான கட்டுமானப்பணிகளை நிறுத்தும்படி மும்பை மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இந்தச் சொத்தை வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதற்கு தாங்கள் எந்த அனுமதியும் வழங்கவில்லை என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அந்த நோட்டீசில், அஜய் தேவ்கனிடம் உரிய ஆவணங்களை தாக்கல் செய்யும்படி மாநகராட்சி அதிகாரிகள் கேட்டுள்ளனர். அதற்கு பதிலளிக்க அஜய் தேவ்கன் குடும்பத்தினர் நான்கு வார கால அவகாசம் கோரியுள்ளனர். அஜய் தேவ்கன் தரப்பில் விசாரித்தபோது, “குறிப்பிட்ட வளாகத்தைப் வர்த்தக ரீதியில் பயன்படுத்துவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து பெறப்பட வேண்டிய அனுமதிகள் மற்றும் ஒப்புதல்கள் முறையாகப் பெறப்பட்டுள்ளன” என்று தெரிவித்தனர். அஜய் தேவ்கன் தனது சொத்தை சலூன் மற்றும் ஸ்பா தொடங்க ஒரு நிறுவனத்திற்கு ஐந்து ஆண்டுகளுக்கு மொத்த வாடகைத் தொகையாக ரூ.10.61 கோடிக்கு அஜய் தேவ்கன் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது அஜய் தேவ்கன் நடித்த ‘திரிஷ்யம்: தி கன்க்ளூஷன்’ திரைப்படம் வரும் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/ajay-devgns-bungalow-faces-bmc-stop-work-notice-over-proposed-salon




