மாமல்லபுரம், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். பாமக பொதுச் செயலராக வடிவேல் ராவணன், பொருளாளராக திலகபாமா ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர். தேர்தலுக்கு முன் ராமதாஸ் - அன்புமணி பிரிந்து இருந்த நிலையில், தேர்தலுக்கு பின் மீண்டும் இணைந்தனர். பொதுக்குழு கூட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று (புதன்கிழமை) காலை 11 மணிக்கு மாமல்லபுரத்தில் உள்ள கான்ப்ளூயன்ஸ் அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பா.ம.க. பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்நிலையில் பொதுக்குழு கூட்டத்தில் பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். மேலும் 31 தீர்மானங்கள் அந்த பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன. 1. பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு ஒருமனதாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மருத்துவர் அன்புமணி ராமதாஸ், ச.வடிவேல் இராவணன், ம. திலகபாமா ஆகியோருக்கு வாழ்த்துகள். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், பொதுச் செயலாளர் ச.வடிவேல் இராவணன், பொருளாளர் ம.திலகபாமா மற்றும் பிற நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டுமே 28-ஆம் தேதியுடன் நிறைவடையவிருந்த நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9-ஆம் தேதி நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் அவர்களின் பதவிக்காலம் இந்திய தேர்தல் ஆணையத்தால் ஓராண்டு காலத்திற்கு நீட்டிக்கப்பட்டது. நீட்டிக்கப்பட்ட பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதியுடன் நிறைவடைவதால், அப்பதவிகளுக்கு கட்சி அமைப்பு விதி எண்கள் 26, 27 ஆகியவற்றின்படி தேர்தல் அறிவிக்கப்பட்டது. மாவட்ட, ஒன்றிய, மாநகர, நகர, பேரூர் அளவிலான தேர்தல்கள் பல கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து மாநில பதவிகளுக்கு அறிவிக்கப்பட்ட தேர்தல்களில் தலைவர் பதவிக்கு மருத்துவர் அன்புமணி ராமதாஸ், பொதுச் செயலாளர் பதவிக்கு ச.வடிவேல் இராவணன், பொருளாளர் பதவிக்கு ம.திலகபாமா ஆகியோர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்ததால் அவர்கள் மூவரும் மீண்டும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக பா.ம.க. அமைப்புத் தேர்தலை நடத்த அமைக்கப்பட்ட தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அவர்களின் தேர்வை இப்பொதுக்குழு அங்கீகரிப்பதுடன், அவர்களின் பணி சிறக்க நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. அன்புமணி ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் கடந்த ஆண்டு ஜூலை 25-ஆம் நாள் தொடங்கி நவம்பர் 9-ஆம் நாள் வரை மொத்தம் 109 நாள்களுக்கு தமிழ்நாடு முழுவதும் மேற்கொண்ட தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் தான் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளம் அமைத்தது. 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வீசிய அலை பாட்டாளி மக்கள் கட்சி வலிமையாக உள்ள மாவட்டங்களில் நுழையாமல் தடுத்ததும் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும். சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகும் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் சதிக்கு எதிராக மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் மேற்கொண்ட 4 நாள் விழிப்புணர்வு பரப்புரை பயணம் உழவர்களிடம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த மக்களிடமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. இத்தகைய முன்னெடுப்புகளை தொடர்ந்து மேற்கொண்டு பாட்டாளி மக்கள் கட்சியை மேலும் வலுப்படுத்துவார்; அதிகாரத்திற்கு அழைத்துச் செல்வார் என்று நம்பிக்கை தெரிவிக்கும் இந்த பொதுக்குழுக் கூட்டம், அதற்காக அவர் முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழுமையான ஆதரவளிக்க உறுதியேற்கிறது. மருத்துவர் அய்யா 2. பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் சமூகநீதி, அரசியல் சாதனைகளை இப்பொதுக்குழு பாராட்டுகிறது; நன்றி தெரிவித்துக் கொள்கிறது! தமிழ்நாட்டு அரசியலில் தவிர்க்க முடியாத தலைவராக திகழ்பவர் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அண்மையில் 88-ஆம் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ள நிலையில் அவருக்கு பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. அவர் நல்ல உடல் நலத்துடன் நூறாண்டுகள் வாழ வேண்டும் என இப்பொதுக்குழு வாழ்த்துகிறது. தமிழ்நாட்டிலும், தேசிய அளவிலும் 6 வகையான இட ஒதுக்கீடுகளை வென்றெடுத்துக் கொடுத்து, 100 கோடிக்கும் கூடுதலான மக்களுக்கு சமூகநீதி வழங்கியவர்; சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் ஆர்வம் கொண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரி, குளங்களை தூர் வாரியவர்; சமச்சீர் கல்வி கொண்டு வந்தவர்; மருத்துவம், வேளாண்மை, நீர்ப்பாசனம் சார்ந்து ஏராளமான முன்னெடுப்புகளை மேற்கொண்டவர்; சமூக நல்லிணக்கத்திற்காக பாடுபட்டவர்; ஈழத்தமிழர் நலனுக்காக எண்ணற்ற போராட்டங்களை முன்னெடுத்தவர்; தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் தலைவர்களாலும் மதிக்கப்பட்டவர் என ஏராளமான பெருமைகள் மருத்துவர் அய்யா அவர்களுக்கு உண்டு. தமிழ்நாட்டிற்கும், தமிழ்ச் சமூகத்திற்கும் ஆற்றிய பணிகளுக்காக மருத்துவர் அய்யா அவர்களுக்கு இந்தப் பொதுக்குழு பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது. முதல்-அமைச்சர் விஜய் 3. தமிழ்நாட்டில் சமூகநீதி சர்வே நடத்தப்படும் என்று கவர்னர் உரை வாயிலாக அறிவித்த முதல்-அமைச்சர் விஜய் அவர்களுக்கும், அறிவிக்கச் செய்த பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கும் நன்றியும், பாராட்டுகளும் - சமூகநீதி சர்வேயை உடனடியாக நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேகதாது அணை 4. மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் சதித்திட்டத்தை முறியடிப்பதற்காக காவிரி பாசன மாவட்டங்களில் 4 நாள்கள் விழிப்புணர்வு பரப்புரை மேற்கொண்ட மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு பாராட்டுகள். 5. மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகத்திற்கு ஆதரவாக செயல்படும் மத்திய அரசுக்கு கண்டனம்: புதிய நடுவர் மன்ற கோரிக்கையையும், கர்நாடக அரசுடன் நேரடியாக பேச்சு நடத்தும் முடிவையும் கைவிட்டு, தமிழக அரசு விழிப்புடன் செயல்பட வேண்டும். 6. விவசாயிகளின் கூட்டுறவு பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். வெளிச்சந்தையில் கடன் வாங்கியாவது கூட்டுறவு வங்கிகளில் அரசு செலுத்த வேண்டும். 7. மாணவர்களின் உயிர்களைப் பறிக்கும் நீட் தேர்வுக்கு முடிவு கட்ட வேண்டும்; நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரும் சட்டத்தை மீண்டும் இயற்றி, மத்திய அரசின் ஒப்புதலைப் பெற அனைத்து அரசியல் கட்சிகளும் கைக்கோர்த்து செயல்பட வேண்டும். மாநிலப் பட்டியலில் கல்வி 8. கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மீண்டும் மாற்ற வேண்டும்; 50 ஆண்டு கால அநீதிக்கு இப்போதாவது மத்திய அரசு முடிவு கட்ட வேண்டும். 9. தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும்: விவசாயிகள் செலுத்த வேண்டிய நிலவரியை முழுமையாக ரத்து செய்வதுடன், பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். 10. வறட்சியால் குறுவை சாகுபடி செய்ய முடியாத உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வீதம் நிவாரண உதவி வழங்க வேண்டும். போதைப்பொருள் நடமாட்டம் 11. நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.3500, கரும்புக்கு டன்னுக்கு ரூ.5000 வீதம் கொள்முதல் விலை வழங்க வேண்டும். 12. பள்ளிக்கரணை உள்ளிட்ட 26,883 சதுப்பு நிலங்களையும் உடனடியாக எல்லைகளை வரையறுத்து அறிவிக்கை செய்ய வேண்டும். 13. ரெஸ்டோ பார்களை திறக்கும் கேடான திட்டத்தை அரசு கைவிட வேண்டும்; மதுக்கடைகளை படிப்படியாக மூடி தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும். 14. தமிழ்நாட்டில் இன்னும் கட்டுப்படுத்தப்படாத போதைப்பொருள்கள் நடமாட்டம்: இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 15. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்த வேண்டும்: சிங்கப்பெண் சிறப்புப் படைகளை வலுப்படுத்த வேண்டும். கனிம வளங்கள் கொண்டு செல்ல தடை 16. தமிழ்நாட்டிலிருந்து கனிம வளங்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது; கடந்த காலகனிமவளக் கொள்ளை குறித்து சிபிஐ விசாரணைக்கு தமிழ்நாடு அரசு ஆணையிட வேண்டும். 17. 12 புதிய மணல் குவாரிகளை திறக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். கட்டுமானத் தேவைகளுக்கு மணல் இறக்குமதியை ஊக்குவிக்க வேண்டும். 18. தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 லட்சம் பணியிடங்களை நிரப்பும் வகையில் அடுத்த ஓராண்டில் ஒன்றரை லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். 19. தமிழ்நாட்டில் தனியார் தொழில் மற்றும் வணிக நிறுவன வேலைவாய்ப்புகளில் 75% பணிகளை தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்க வகை செய்யும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். 20. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வாக்குறுதி அளித்தவாறு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். விண்ணைத் தொடும் அரிசி விலை 21. அரசு பள்ளிகளின் வீழ்ச்சியை தடுக்க வேண்டும்; அரசு பள்ளிகளில் ஒரு லட்சம் ஆசிரியர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 22. பல்கலைக்கழக துணைவேந்தர் தேடல் குழுக்களில் யு.ஜி.சி பிரதிநிதியைச் சேர்க்கக் கூடாது; பல்கலைக்கழக சட்டங்களில் இதற்காக திருத்தம் செய்யக் கூடாது. 23. பாலுக்கான கொள்முதல் விலையை அதிகரிக்க வேண்டும்; தனியார் நிறுவனங்களின் பால் விற்பனை விலையை கட்டுப்படுத்த ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும். 24. விண்ணைத் தொடும் அரிசி விலையால் ஏழை மக்கள் அவதி. விலையைக் கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 25. உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள பாட்டாளி மக்கள் கட்சி தயார். கிராம அளவில் மக்களை சந்தித்து ஆதரவைத் திரட்ட வேண்டும். 26. தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாற்றப்பட்டதில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்; 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும். உள்இடஒதுக்கீடு 27. மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்பில் ஓ.பி.சி.களுக்கு உள்இடஒதுக்கீடு வழங்குவதற்கான ரோகிணி ஆணையத்தின் பரிந்துரை அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும்: உடனடியாக செயல்படுத்த வேண்டும். 28. காவிரி பிரச்சினையில் புதுச்சேரியின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்; மேகதாது அணைக்கு எதிராக புதுச்சேரி சட்டப்பேரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். 29. புதுவையில் கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் செயல்பட்டு வரும் மதுக்கடைகள், சாராயக்கடைகளை மூட வேண்டும். 30. புதுவையில் தனியார் தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் 75 விழுக்காட்டை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கீடு செய்து சட்டம் இயற்ற வேண்டும். 31. பாட்டாளி மக்கள் கட்சியின் கணக்குத் தணிக்கையாளர் அரங்க. சுப்புரத்தினம் மறைவுக்கு இரங்கல்; புதிய தணிக்கையாளராக திருவாளர்கள் பி.எஸ். மூர்த்தி அசோசியேட்ஸ் நியமனம் செய்யப்பட்டதற்கு ஒப்புதல். பாட்டாளி மக்கள் கட்சியின் வரவு - செலவு கணக்குகளை தணிக்கை செய்ய சென்னைஅடையாறை சேர்ந்த திருவாளர்கள் பி.எஸ்.மூர்த்தி அசோசியேட்ஸ் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நியமனத்திற்கு இந்தப் பொதுக்குழு ஒருமனதாக ஒப்புதல் அளிக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/anbumani-re-elected-as-pmk-leader-at-the-general-council-meeting-key-resolutions-passed




