நாகப்பட்டினம், நாகை நீலாயதாட்சியம்மன் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். நாகப்பட்டினத்தில் அருள்மிகு காயாரோகணேஸ்வரர் உடனுறை நீலாயதாட்சி அம்மன் கோவில் உள்ளது. இங்கு எழுந்தருளியிருக்கும் அம்மன், பெண்மையின் ஐந்து முக்கிய வளர்ச்சி நிலைகளில் 15 வயது "பருவ மங்கை" வடிவமாக அருள்பாலிக்கிறார். இந்து சமய வழிபாட்டில் பெண் தெய்வங்களின் வாழ்க்கை நிலைகளை விளக்கும் ஐந்து முக்கிய ஆட்சி பீடங்களில் இத்தலமும் ஒன்றாகும். இக்கோவிலில் ஒவ்வொரு ஆடி மாதமும் ஆடிப்பூரம் விழா வெகு விமரிசையாக நடைபெறும். பூரம் நட்சத்திர நாளில் சீப்பு, கண்ணாடி, வளையல், குங்குமம், முளைப்பயிர் உள்பட பொருட்களை வைத்து ஆகம முறைப்படி பூஜை செய்து பக்தர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம். ஆடிப்பூர விழா கொடியேற்றம் அவ்வகையில் இந்த ஆண்டின் ஆடிப்பூர விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிறப்பு பூஜைகளுக்கு பின், அம்மன் சன்னதியில் உள்ள கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது. கொடிமரத்திற்கு மஞ்சள், திரவியம், மாப்பொடி, பச்சரிசி, இளநீர், தேன், பால் தயிர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் கோவில் செயல் அலுவலர் தனலட்சுமி மற்றும் கோயில் பணியாளர்கள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா நாட்களில் பூத வாகனம், மகாலட்சுமி அவதாரம், சிம்ம வாகனம், கிளி வாகனம், வேணுகோபால் அவதாரம், சிவலிங்க பூஜை என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் ஆடிப்பூர அம்மன் வீதியுலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான பூரம் கழித்தல் 14-ம் தேதியும், ஊஞ்சல் உற்சவம் 15-ம் தேதியும் நடைபெறும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/aadi-pooram-festival-begins-at-neelayadakshi-amman-temple-in-nagai




