சென்னை, "ரஜினிகாந்துடன் பணியாற்றியது மிகவும் அற்புதமாக இருந்தது. தற்போது அவர் எனது நண்பராகிவிட்டார். எனக்கு பிடித்த இணை நடிகர்களில் ரஜினிகாந்தும் ஒருவர்" என ரசிகரின் கேள்விக்கு ராஷி கன்னா பதிலளித்துள்ளார். பிசியான நடிகை ராஷி கன்னா தென்னிந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகியான ராஷி கன்னாவின், அலட்டல் இல்லாத நடிப்புக்கு ரசிகர்கள் ஏராளம். தமிழ் தாண்டி இதர மொழி படங்களிலும் பிசியாக நடித்து வரும் ராஷி கன்னா, சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவ் ஆக இருக்கிறார். கிடைக்கும் நேரங்களில் ரசிகர்களிடம் கலந்துரையாடி வருகிறார். ’தர்மன்' படத்தில் ராஷி கன்னா இவர் ரஜினிகாந்த் நடித்து வரும் தர்மன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்க, இளம் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கி வருகிறார். மருத்துவர் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிப்பதாக கூறப்படும் இந்தப் படத்தில் சிம்ரன், யோகி பாபு, ராஷி கன்னா மற்றும் ருக்மிணி வசந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தலைவர் இப்போது என் நண்பர்! இந்த நிலையில், நடிகை ராஷி கன்னாவிடம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவர் “தலைவருடன் வேலை பார்த்தது எப்படி இருந்தது?” என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த ராஷி கன்னா, "ரஜினிகாந்துடன் பணியாற்றியது மிகவும் அற்புதமாக இருந்தது. தற்போது அவர் எனது நண்பராகிவிட்டார். நான் தொடர்ந்து பல கேள்விகளைக் கேட்டாலும், அவர் புன்னகையுடன் பொறுமையாகப் பதிலளிப்பார். நகைச்சுவை உணர்வும் அதிகம்; அவ்வப்போது என்னைக் கேலி செய்வார். எனக்கு பிடித்த இணை நடிகர்களில் ரஜினிகாந்தும் ஒருவர். அவரை அருகில் இருந்து கவனிப்பதன் மூலம் பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும்” என்று ரசிகருக்கு பதிலளித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/thalaivar-is-now-my-friend-raashii-khanna-speaks-movingly-about-rajinikanth




